twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மிஸ் யுனிவர்ஸ் ஆவாரா சிம்ரன்?

    By Staff
    |

    Simran Karu
    ஹனோய்: மிஸ் யுனிவர்ஸ் எனப்படும் பிரபஞ்ச அழகிப் போட்டியில் நீச்சல் அழகி அணிவகுப்பு சமீபத்தில் நடந்தது. இந்திய அழகி சிம்ரன் கவுர் முண்டி இதில் கலந்து கொண்டார்.

    57 வது பிரபஞ்ச அழகிப் போட்டி வியட்நாமின் நா ட்ரங் நகரில் நடைபெற்று வருகின்றன. ஜூன் 30-ம் தேதி துவங்கிய இப்போட்டியின் முக்கிய நிகழ்வான நீச்சல் அழகி அணிவகுப்பு புதன்கிழமை நடந்தது.

    இப்போட்டியின் இறுதிச் சுற்று நாளை மறுநாள் நடக்கிறது. இதில் அனைத்து நாட்டு அழகிகளும் பங்கு பெற்று தங்கள் திறமைகளைக் காட்டுகின்றனர். ஜூலை 14-ம் தேதி பிரபஞ்ச அழகி யார் என்பதை நடுவர்கள் அறிவிப்பார்கள். அன்றே பிரபஞ்ச அழகிக்கு கிரீடமும் அணிவிக்கப்படுகிறது.

    இந்தியாவிலிருந்து சிம்ரன் கவுர் முண்டி இந்தப் போட்டியில் பங்கேற்கிறார். நீச்சல் அழகி அணிவகுப்பில் அவர் கொடுத்த போஸ்தான் இங்கே நீங்கள் பார்ப்பது.

    1994-ம் ஆண்டு சுஷ்மிதா சென் முதல் பிரபஞ்ச அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவிலிருந்து இப்போட்டியில் தேர்வான முதல் இந்தியப் பெண் இவர்தான்.

    அதன் பிறகு ஐஸ்வர்யா ராய், யுக்தா முகி, லாரா தத்தா என பலர் பிரபஞ்ச, உலக அழகிகளாக கிரீடம் சூடினர். இந்தியாவில் அழகு சாதனப் பொருட்களுக்கான சந்தையும் களை கட்டியது. இன்று சர்வதேச அளவில் ஒதுக்கப்பட்ட அல்லது மலிவான பல அழகு சாதனப் பொருட்களும், புதிய வடிவில், புதிய பெயரில் இந்தியச் சந்தைகளை ஆக்கிரமிக்க இந்த அழகிப் போட்டிகள்தான் அகலமாக வாசல்களைத் திறந்து வைத்தன.

    இந்த முறை சிம்ரன் கவுர் மகுடம் சூடுவாரா... இன்னும் பல அழகுசாதன பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவுக்குள் கால்பதிக்கக் காரணமாவாரா... பார்ப்போம்!

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X