உலக நாயகன் - திரைப்படமாகும் ஒய்.எஸ்.ஆர். வரலாறு!

லோக நாயகுடு (உலகநாயகன்) எனும் பெயரில் இந்தப் படத்தைத் தயாரிக்கப் போவது நடிகர் ராஜசேகர் மனைவி ஜீவிதா.
இந்தப் படத்தில் டாக்டர் ராஜசேகர் நடிக்கிறார். இந்தத் தகவலை திருப்பதியில் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார் ஜீவிதா. உடன் டாக்டர் ராஜசேகரும் இருந்தார்.
அவர்கள் கூறியதாவது:
ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகரரெட்டி மக்களின் முன்னேற்றத்துக்காகவும் ஆந்திர மாநில வளர்ச்சிக்காகவும் மிகவும் பாடுபட்டவர். அவரது வாழ்க்கையைப் பற்றியும், அவரது சேவைகள் பற்றியும் ஆந்திர மக்கள் நன்கு அறிவார்கள்.
இதை இந்திய மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் இப்படிப்பட்ட நல்ல தலைவர்கள் உருவாக தூண்டுதல் ஏற்படும்.
இதற்காக ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை 'லோக நாயகுடு' (உலக நாயகன்) என்ற பெயரில் திரைப்படமாக தயாரிக்க முடிவு செய்துள்ளோம். ராஜசேகர ரெட்டிக்கு நாங்கள் செலுத்தும் அஞ்சலி இது, என்றனர்.
டாக்டரக் ராஜசேகர் மற்றும் ஜீவிதா இருவருமே காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டு வருகின்றனர் என்பது தெரிந்ததே..


Click it and Unblock the Notifications











