ஒரே நாளில் 6 பூஜை!

By Staff

Mysskin with Sniktha in Nandhalala Movie Launch
ஜூன் 6ம் தேதி வெள்ளிக்கிழமையன்று, 6 புதிய படங்களுக்கு கோலிவுட்டில் பூஜை போடப்பட்டது.

ஒர நாளில் அதிக அளவிலான படங்களுக்கு தமிழ் சினிமாவில் பூஜை போடப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

விஜய் - நயனதாரா ஜோடியாக நடிக்கும் வில்லு படத்திற்கு பழனி அருகே நெய்க்காரன் பட்டி கிராமத்தில், பூஜை போடப்பட்டது.

மிஷ்கின் ஹீரோவாக அவதாரம் எடுக்கும் நந்தலாலா படத்தின் பூஜைதான் பெரிதும் பேசப்பட்டது. வடபழனி க்ரீன் பார்க் ஹோட்டலில் நடந்த இந்த நிகழ்ச்சியில், நாயகி ஸ்னிக்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அஞ்சாதே படத்தில் கத்தாழை கண்ணாலே போட்டுக்கு கெட்ட ஆட்டம் போட்டவர்தான் ஸ்னிக்தா.

இப்போது நந்தலாலா படம் மூலம் நாயகியாக உயர்வு பெற்றுள்ளார். இப்படத்திற்காக மிஷ்கின் தாடி, தலைமுடியை எடுத்து டிரிம் ஆகியுள்ளார். இப்பூஜையின் நிறைவுப் பகுதியின்போது இசைஞானி இளையராஜா திடீரென வருகை தந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

வழக்கமாக பூஜை, பட விழாக்களுக்கு இளையராஜா அவ்வளவு எளிதில் வந்து விட மாட்டார். எனவே ராஜாவின் வருகை, மிஷ்கினை குஷிப்படுத்தி விட்டது.

இப்படத்துக்காக 6 அருமையான பாடல்களை இளையராஜா போட்டுக் கொடுத்து விட்டாராம். பாடல்கள் அத்தனையும் அட்டகாசமாக வந்திருப்பதாக மிஷ்கின் கூறியுள்ளார். பட பூஜையின் பேனரில் பட டைட்டிலுக்குப் பிறகு இளையராஜாவின் பெயரைத்தான் மிஷ்கின் போட்டிருந்தார். அவரது பெயர் அதற்கடுத்துதான் இருந்தது.

அடுத்து, ராஜ்கிரண், மிருகம் புகழ் ஆதி ஆகியோர்இணைந்து நடிக்கும் சரித்திரம் படத்தின் பூஜையும் நேற்று நடந்தது. மிருகம் படத்தின் இயக்குநர் சாமி, இடையில் போடப்பட்ட தடையின் முடிவில் இப்படத்தை இயக்க வந்துள்ளார்.

சிலம்பாட்டக் கலையை மையமாகக் கொண்ட கதை இது. ராஜ்கிரண் சிலம்பாட்ட வாத்தியாராக நடிக்கிறார். அவருடைய சிஷ்யராக வருகிறார் ஆதி.

ஷாம் நடிக்கும் அகம் புறம் படமும் நேற்று பூஜை போடப்பட்டது. தீ நகர் படப் புகழ் திருமலை இப்படத்தை இயக்குகிறார்.

இதுதவிர மீரா ஜாஸ்மின், புதுமுகம் தேவ் இணைந்து நடிக்கும் தெய்வமகன் படத்திற்கும் நேற்று ஏவிஎம்மில் பூஜை போடப்பட்டது. புதுமுகம் வெற்றி படத்ைத இயக்குகிறார்.

சேர நாட்டு சோலையே என்ற படத்திற்கும் நேற்று பூஜை போடப்பட்டது. ஜீவகன் - தேசிகா இணைந்து நடிக்கவுள்ளனர். இருவரும் புதுமுகங்கள். பிரதாப் மணி இயக்குகிறார்.

ஆறு படங்களும் தயாரிப்பாளர்ளுக்கு அள்ளித் தர வாழ்த்துவோம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X