பி.வாசு மகன் நடிகர் சக்தி - ஷம்ருதி நிச்சயதார்த்தம்

By Shankar

Sakthi and Remya Nambeesan
இயக்குநர் பி வாசுவின் மகன் நடிகர் சக்திக்கு நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. சென்னையைச் சேர்ந்த ஷம்ருதியை அவர் மணக்கிறார்.

சின்னத்தம்பி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகர் சக்தி. இவர் இயக்குநர் பி.வாசுவின் மகன். தொட்டால் பூ மலரும் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். இதைத்தொடர்ந்து நினைத்தாலே இனிக்கும், சரண்யா மகேஷ் மற்றும் பலர், ஆட்டநாயகன் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இவருக்கும், சென்னையைச் சேர்ந்த முரளி-துஷிதா தம்பதியின் மகள் ஷம்ருதிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்கள் திருமண நிச்சயதார்த்த விழா சென்னையில் உள்ள பார்க் ஷெராட்டன் ஓட்டலில் நேற்று திங்கள்கிழமை காலை நடந்தது. இந்த நிகழ்ச்சியில், முக்கிய உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

சக்தி-ஷம்ருதி திருமணம் வரும் அக்டோபர் 31-ந் தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரம் மேயர் ராமநாதன் திருமண மண்டபத்தில் நடக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X