வேலாயுதம் படத்தில் ராபின்ஹூட் வேடத்தில் நடிக்கிறார் விஜய்.

ஆக்ஷன், காதல் கலந்த இந்தப் படத்தில், இருப்பவர்களிடம் பிடுங்கி இல்லாதவர்களுக்குத் தரும் நவீன ராபின்ஹூட்டாக நடிக்கிறாராம் விஜய்.
இந்தப் படத்துக்கான ஃபோட்டோ ஷூட் நேற்று சாலிகிராமத்தில் உள்ள ஸ்டுடியோவில் நடந்தது. படத்தின் நாயகி ஹன்ஸிகா மோத்வானி இதில் பங்கேற்றார்.
இந்தப் படத்தின் இன்னொரு நாயகியாக ஜெனிலியா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் தடையை மீறி இலங்கைக்கு காதலருடன் சென்றவர், விஷயம் வில்லங்கமாவதை உணர்ந்து, அடுத்த பிளைட்டிலேயே மும்பைக்கு ஓடினார். அங்கிருந்து சென்னையில் உள்ள நிருபர்களுக்கும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கும் போன் செய்து, நான் போகவில்லை என்று கற்பூரம் அடிக்காத குறையாக பொய் சத்தியம் அடித்துள்ளார்.
ஆனால் இவர் கொழும்பிலிருந்தது உண்மைதான் என்பதைத் தெரிந்து கொண்ட தயாரிப்பாளர்கள் கடுமையாகத் திட்ட, விஷயம் தற்போது நடிகர் சங்கத்திடம் போயுள்ளது.
ஜெனிலியா மீது அடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து இன்னும் தெரிவிக்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications











