மீண்டும் அசத்திய கஜோல், அஜய் தேவ்கன்

By Staff

Ajay Devgan with Kajol
அஜய் தேவ்கனின் முதல் இயக்கத்தில் உருவாகியுள்ள யு, மீ அவுர் ஹம் படம் திரைக்கு வருகிறது. இதில் கஜோல் படு கலக்கலாக நடித்துள்ளாராம்.

பாலிவுட்டின் ஹாட்டஸ்ட் ஜோடிகளில் ஒன்றுதான் அஜய் தேவ்கன் - கஜோல் இணை. இதுவரை நடிக்க மட்டுமே செய்து வந்த அஜய் தேவ்கன் இப்போது, அமீர்கான் பாணியில் இயக்குநராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.

நடிகர் அஜய் தேவ்கன் முதன்முதலில் இயக்கியுள்ள 'யு, மீ அவுர் ஹம்' என்ற புதிய படத்தின் தயாரிப்புவேலைகள் முடிந்து விரைவில் ரிலீஸாகவுள்ளது. இதில் அஜய் தேவ்கனும், கஜோலும் ஜோடி போட்டுக் கலக்கியுள்ளனர். குறிப்பாக கஜோலின் நடிப்பில் அதே பழைய துடுக்கு, துறுதுறு அப்படிேய இருக்கிறதாம். நடிப்பில் பின்னி எடுத்திருக்கிறாராம்.

தனது படம் குறித்து அஜய் தேவ்கன் கூறுகையில், நான் ஒரு பிறவி இயக்குநர். திரையுலகில் காலடியெடுத்து வைத்தபோதே மினி பட்ஜெட் படங்களை இயக்கியுள்ளேன். எனக்குள் அந்த பொறி இன்னும் அணையாமல் இருக்கிறது.

நடிப்பில் ஈடுபட்டபோதும் ப்ரொடக்ஷன், இசையமைப்பு, இயக்கம் என்ற பிற தயாரிப்பு வேலைகளிலும் கவனம் செலுத்தி வந்தேன்.

நான் இயக்கியுள்ள 'யு, மீ அவுர் ஹம்' ஹிட்டாகும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த படத்தில் எனக்கு ஜோடியாக என் மனைவி கஜோலும் நடித்துள்ளார்.

எனது படங்கள் ஓடுகிறதோ இல்லையோ நான் படங்களை இயக்குவதை நிறுத்தப் போவதில்லை என்றார் தேவ்கன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X