80 இசைக் கலைஞர்களுடன் ரஹ்மானின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி!

AR Rahman
எண்பது இசைக் கலைஞர்களுடன் ஏ.ஆர்.ரஹ்மான் நடத்தும் பிரமாண்ட இசை நிகழ்ச்சி சென்னையில் வருகிற அக்டோபர் 11ம் தேதி நடக்கிறது.

ஷக்தி அறக்கட்டளை மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் அறக்கட்டளை ஆகியவற்றுக்கு நிதி திரட்டுவதற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

'ஜெய் ஹோ' என்ற பெயரில் இதனை நடத்துகிறார் ஆஸ்கர் விருது பெற்ற ரஹ்மான்.

நிகழ்ச்சி நடைபெறும் இடம் சென்னையை அடுத்த மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மார்க் ஸ்வர்ணபூமி. தற்காக அங்கு 10 ஆயிரம் சதுர அடியில் பிரமாண்ட மேடை அமைக்கப்படுகிறது. 30 ஆயிரம் பேர் வரை பார்ப்பதற்கு வசதி செய்யப்படுகிறது.

இந்த இசை நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மானின் சமீபத்திய பாடல்கள் மற்றும் ஹரிஹரன், சிவமணி, சாதனா சர்க்கம், பிளேஸ், பென்னி தயால் உள்பட இந்தியாவில் உள்ள முக்கிய பாடகர்களோடு 80க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் பங்கேற்கிறார்கள்.

ஆஸ்கர் விருது பெற்ற பின் ஏ.ஆர்.ரஹ்மான் சென்னையில் நடத்தும் முதல் இசை நிகழ்ச்சி இதுவே. சென்னை ரசிகர்கள் இதுவரை அனுபவித்திராத புதிய தொழில்நுட்பத் தரத்தில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மாநக போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X