ஜூன் 27ல் பொம்மலாட்டம்!

நானாபடேகர், அர்ஜூன், காஜல் அகர்வால் ஆகியோரை வைத்து பாரதிராஜா இயக்கியுள்ள திரில்லர் படம் சினிமா. இந்தியில் இதே பெயரில் இப்படம் வெளியாகிறது. தமிழில், பொம்மலாட்டம் என பெயரிட்டுள்ளார் பாரதிராஜா.
இப்படத்தில் இயக்குநராக நானா படேகர் நடித்துள்ளார். அர்ஜூன் துப்பறியும் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். நடிகையாக வருகிறார் காஜல் அகர்வால். ஹிதேஷ் ரேஷமய்யா இசையமைத்துள்ளார்.
படம் முடிந்து வெகு நாட்களாகிய பின்னரும் எப்போது ரிலீஸாகும் என்பது தெரியாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் இருமொழிகளிலும் ஜூன் 27ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் பாரதிராஜா.
இந்தப் படத்தை முடித்து விட்டு நமது 'மண்ணுக்கு' திரும்பி வருகிறார் பாரதிராஜா. அப்படம் பக்கா பாரதிராஜாவின் மண் வாசனைப் படமாக இருக்கும். இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளார். கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்குப் பிறகு இரு இமயங்களும் மீண்டும் கை கோர்க்கவுள்ளனர்.
அய்ங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. விைரவில் பிற விவரங்களை வெளியிடவுள்ளார் பாரதிராஜா.


Click it and Unblock the Notifications











