twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இலங்கைத் தமிழரின் கின்னஸ் சாதனைப் படத்துக்கு சென்சார் தடை

    By Staff
    |

    Suresh Joachim
    சுரேஷ் ஜோக்கிம் என்ற இலங்கைத் தமிழர் எடுத்த கின்னஸ் உலக சாதனைப் படமான சிவப்பு மழைக்கு இந்திய தணிக்கைத் துறை அனுமதி மறுத்துள்ளது.

    இதுவரை பல பிரிவுகளில் 58 கின்னஸ் சாதனைகளைப் படைத்தவரான சுரேஷ் ஜோக்கிம் இப்போது கனடாவில் வசிக்கிறார்.

    மொத்தம் 12 நாட்களுக்குள் ஒரு படத்தின் ஷூட்டிங், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை முடித்து வெளியிடுவதாகத் திட்டமிட்டிருந்தார். இது கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம் பெற்றது.

    மீரா ஜாஸ்மின், சுமன், விவேக் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்தப் படத்தை கிருஷ்ணமூர்த்தி என்பவர் இயக்கியுள்ளார். திட்டமிட்டபடி சரியாக 12 நாட்களுக்குள் னைத்துப் பணிகளையும் முடித்துவிட்ட சுரேஷ், அந்தப் படத்தை தணிக்கைக் குழுவுக்குக் காட்டி சான்றிதழ் பெற முயன்றார்.

    படத்தைப் பார்த்த அதிகாரிகள், படத்தில் இடம்பெறும் இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பான காட்சிக்கு ஆட்சேபம் தெரிவித்ததுடன் சான்றிதழ் தரவும் மறுத்தனர்.

    இதுகுறித்து டைரக்டர் கிருஷ்ணமூர்த்தி கூறும் போது, "இலங்கை தமிழர் பிரச்சினை பற்றி படத்தில் காட்சி இடம்பெற்றுள்ளது. அதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர். இதையடுத்து, மறு தணிக்கை குழுவினருக்கு படம் திரையிடப்படுகிறது. அப்போது, இலங்கை பிரச்சினை பற்றிய காட்சிக்கு விளக்கம் அளிக்கப்படும், என்று கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

    புலிகள் குறித்துப் பேசினால்தான் தடுத்தார்கள். இப்போது தமிழர்கள் குறித்துப் பேசினாலே தடையா...?

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X