ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்காக படம் இயக்கும் தரணி!

இழந்த பெயரை மீண்டும் பெற கடுமையாக முயற்சித்து வந்த தரணிக்கு, பெரிய வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது. ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்காக இந்தப் படத்தை இயக்குகிறார் தரணி.
ஹீரோ யார் என்று இன்னமும் அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் பட வேலைகளில் மும்முரமாக உள்ளார் தரணி.
தமிழ் - தெலுங்கு என இருமொழிப் படமாக வரும் இந்தப் படத்துக்கு இசையமைப்பவர் தரணியின் ஆஸ்தான இசையமைப்பாளர் வித்யா சாகர் அல்ல... மணி சர்மா. படம் தெலுங்கிலும் ரிலீசாவதால் இந்த மாற்றமாம்.
ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் லீலை உள்ளிட்ட இரு படங்கள் வெளியீட்டுக்குக் காத்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











