தீபிகாவின் அதிருஷ்டத்தில் சுருண்ட சித்தார்த் மல்லையா!

By Staff

Deepika Padukone
தீபிகா படுகோனுக்கும் விஜய் மல்லையாவின் ராயல் சேலஞ்சர்ஸுக்கும் அதிசயமான ஒரு ராசி 'ஒர்க் அவுட்' ஆகி வருவதாக ஐபிஎல் கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

ராயல் சேலஞ்சர்ஸ் விளையாடும் போது போட்டி மைதானத்தில் தீபிகா படுகோன் இருக்கிறார் என்றால், அந்த ஆட்டத்தை ராயல் சேலஞ்சர்ஸ் வெல்வது உறுதி.

இதுவரை பெரும்பாலான மேட்சுகளிலும் இப்படித்தான் நடந்திருப்பதாக ஐபிஎல் வட்டாரத்தினர் கூறுகின்றனர். இந்த மாஜிக் இதுவரை தோற்றதே இல்லையாம்.

இதனால் ராயல் சேலஞ்சர்ஸுக்கு மட்டுமல்லாது, அதன் உரிமையாளர் விஜய் மல்லையாவுக்கும் தீபிகா செல்லப் பிள்ளையாகி விட்டார். விஜய் மல்லையாவுக்கு மட்டுமல்லாது அவரின் தவப்புதல்வன் சித்தார்த் மல்லையாவுக்கும் தீபிகாவை மிகவும் பிடித்துப் போய்விட்டது.

இதுபோதாதா... இவர்கள் இருவரையும் இணைத்து பல செய்திகள் பல மட்டங்களில் அடிபட்டுக் கொண்டு இருக்கிறது. இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று பாலிவுட்டில் தகவல்கள் பரபரவென பரவி வருகின்றன.

கடந்த ஆண்டில் ஐபிஎல் விளையாட்டின் போது ராயல் சேலஞ்சர் அணியை ஆதரிக்க சித்தார்த் வரவேயில்லை. இந்த முறை தீபிகாவை அணியின் தூதராக்கி விட்ட பின், அவர் வந்து கலந்துகொள்ளும் ஒரு ஆட்டத்தையும் தவறவிடுவதில்லை.

இந்த தகவல்கள் வலுவாக உலாவி வரும் நிலையில், சமீபத்தில் பெங்களூரில் பஞ்சாப் அணிக்கு எதிராக நடந்த போட்டி ஒன்றில் தீபிகாவும், சித்தார்த்தும் ஒரே பகுதியில் இருந்தனர்.

அப்போது, ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெற்றி பெற்றவுடன் மகிழ்ச்சியால் துள்ளி குதித்த சித்தார்த், உணர்ச்சி வசப்பட்ட நிலையில், அருகில் பலர் இருப்பதையும் பொருட்படுத்தாமல், தீபிகாவிடம் திரும்பி,

'நீ தான் என் லக்கி மஸ்கட். இன்றைக்கு இரவு உனக்கு மிகப் பெரிய பரிசு காத்திருக்கு' எனக் கூறியுள்ளார்.

அருகில் இருந்தவர்கள் இதை பார்த்ததைக் கவனித்த தீபிகா அதிர்ச்சியும், தர்மசங்கடமும் கலந்த கலவையான முகபாவத்துடன் நெளிந்து வழிந்தாராம்.

தற்போதைக்கு இந்த இரண்டு பேருமே பேச்சலர்ஸ் என்பதால், 'பெர்ஃபெக்ட் பேர்' என்று பலரும் தூபம் போட்டு வருகின்றனராம்.

'மேரேஜ் லீக்"கில் இணையுமா இந்த ஐபிஎல் ஜோடி...?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X