ரஜினி ரசிகர்களின் 'ஈரம்'!

வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஈரம் படத்தின் சிறப்புக் காட்சியை சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக போர் பிரேம்ஸ் தியேட்டரி்ல் ஏற்பாடு செய்திருந்தனர்.
படத்தின் தயாரிப்பாளரான இயக்குநர் ஷங்கர், ஹீரோ ஆதி, இயக்குநர் அறிவழகன், இசையமைப்பாளர் தமண் உள்ளிட்ட மொத்த படக்குழுவும் ஆஜராகியிருந்தது.
படத்தை ரசித்துப் பார்த்த ரஜினிகாந்த், வெகுவாகப் பாராட்டினார். மேலும், சந்திரமுகி, அருந்ததி போல இதுவும் பெண்களை வெகுவாக கவரும் கதை என்றும் பாராட்டினார்.
படத்தின் இயக்குநர் அறிவழகன், அடிப்படையில் ரஜினி ரசிகராம். ஈரம் குறித்து அறிவழகனும், தமணும் கூறுகையில், இது ரஜினியின் ஆசிர்வாதங்களோடு அவரது ரசிகர்களால் உருவாக்கப்பட்ட படம் என்று பெருமையுடன் கூறினர்.
Comments


Click it and Unblock the Notifications