சிம்புவுக்கு பின்னணி பாடிய இசைஞானி!

By Staff

Illayaraja
என்னுடைய திரையுலக வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கிடைத்துவிட்டது என புல்லரித்துப் போய் பேசுகிறார் சிம்பு.

இருக்காதே பின்னே... நமக்குப் போய் இவர் பாடுவாரா? என்ற ஏக்கத்தோடு பல இளம் நடிகர்களும் காத்திருக்க, சிம்புவுக்குப் பின்னணி பாடி அசத்தியிருக்கிறார் இந்தியாவின் இணையற்ற இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா.

தமிழ் திரையுலகை இப்போது தன்வசமாக்கிக் கொண்டிருக்கும் மகன் யுவன் சங்கர் ராஜா இசையில் சிலம்பாட்டம் படத்துக்காக இந்தப் பாடலைப் பாடிக் கொடுத்துள்ளாராம் இசைஞானி.

'எனக்கெல்லாம் அவர் பின்னணி பாடுவார் என்பதை கனவிலும் நினைத்துப் பார்க்காதவன் நான். என் அப்பாவுக்கு மிகவும் பிடித்த ஒரே இசையமைப்பாளர் இளையராஜா சார்தான். அப்பா தனது முதல் படம் ஒருதலை ராகத்திலேயே ராஜா சாரின் இசையைப் பற்றி மிக உயர்வாகக் குறிப்பிட்டிருப்பார்.

அப்படிப்பட்ட இணையற்ற மனிதர் எனக்கு பின்னணி பாடியிருப்பது என் வாழ்நாளில் மறக்க முடியாத பெருமைதான். எனக்கெல்லாம் அவர் இசையில் ஒரு சின்ன பாட்டாவது பாடமாட்டோமா என்ற ஏக்கம் எப்போதும் உண்டு. விரைவில் அந்த ஆசையும் நிறைவேறும் என நம்புகிறேன், என்று நெகிழ்கிறார் சிம்பு.

இளையராஜா சமீபத்தில் பாடிய அனைத்துப் பாடல்களுமே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. பருத்தி வீரன், தமிழ் எம்ஏ, தனம் படங்களில் ராஜா பாடிய பாடல்கள் பெரிதும் பேசப்பட்டன.

ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குநராகியிருக்கும் சரவணன் இயக்கும் சிலம்பாட்டம் படத்தில் சிம்புவுக்கு ஜோடி சினேகா உல்லல். தீபாவளிக்குப் பிறகு வெளி வருகிறது சிலம்பாட்டம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X