கமல் 50: விஜய் to கலைஞர் டிவி!

1959-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தவர் கமல். இப்போது அவரது திரை வாழ்க்கைக்கு 50 ஆண்டுகள் ஆகின்றன. இந்த நிகழ்ச்சியை பெரிய அளவில் கொண்டாடத் தயாராகி வருகின்றனர் அவரது ரசிகர்கள்.
ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியை விஜய் டிவி செய்வதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக ஏராளமான விளம்பரதாரர்களைப் பிடித்துவிட்ட விஜய் டிவி, பிரபலங்களின் பேட்டிகளையெல்லாம் எடுத்து வைத்திருந்தது. ஆகஸ்ட் 30 -ம் தேதி பிரமாண்ட அளவில் விழா எடுத்து, அதை பலவாரங்களுக்கு டிவியில் ஒளிபரப்பத் திட்டமிட்டிருந்தது.
இந் நிலையில், கமல் பொன்விழா மற்றும் அது தொடர்பான நிகழ்ச்சிகளை கலைஞர் டிவி நடத்த முடிவு செய்து அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளது.
கலைஞர் டிவி இந்த நிகழ்ச்சியை எக்ஸ்க்ளூசிவ்வாக ஒளிபரப்புவதால், விஜய் டிவியின் கமல் -50 நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











