மீனாட்சியைப் பிடித்த கரு பழனியப்பன்!

By Sudha

Meenakshi
மந்திரப் புன்னகை படம் மூலம் ஹீரோவாக அவதாரமெடுத்துள்ளார் இயக்குநர் கரு பழனியப்பன்.

பார்த்திபன் கனவு மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பழனியப்பன். பின்னர் சிவப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம் போன்ற படங்களை இயக்கினார். ஆனால் முதல் படம் மட்டுமே குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது. மற்ற படங்கள் தோல்வியைத் தழுவின.

இந்த நிலையில், தனது அடுத்த படத்துக்கு மந்திரப் புன்னகை என்று பெயர் சூட்டியுள்ளார் (இந்தப் பெயரில் ஏற்கெனவே சத்யா மூவீஸ் ஒரு படம் தயாரித்தது நினைவிருக்கலாம்).

கரு பழனியப்பனுக்கு இந்தப் படத்தில் ஜோடி போடுபவர், கவர்ச்சியில் எந்த அளவுக்கும் இறங்கத் தயாராக உள்ள மீனாட்சி. ஆனால் இந்தப் படத்தில் அடக்கமான குடும்பப் பெண்ணாக வருகிறாராம். இவர்தான் ஹீரோயினாக வேண்டும் என தேடிப்போய் அட்வான்ஸ் கொடுத்தாராம் இயக்குநர்.

ஏன் இந்த திடீர் முடிவு?

"இந்தக் கதைக்கு நான் சரியா இருப்பேன்னு தயாரிப்பாளர் நினைத்தார். அதை என்னிடமும் சொன்னார். எனக்கும் நடிப்பில் ஆர்வம் உண்டு. உடனே ஒப்புக்கொண்டேன்" என்கிறார் கரு பழனியப்பன்.

வித்யாசாகர் இசையமைக்கிறார். பிஆர்ஓ நிகில்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X