'ஜஸ்ட்' பத்தே நிமிடத்தில் கருணாநிதி எழுதிய டூயட் பாடல்!

By Staff

Karunanidhi
பெண் சிங்கம் படத்தில் இடம்பெறும் ஒரு டூயட் பாடல் வெறும் பத்து நிமிடத்தில் எழுதி முடித்தாராம் முதல்வர் கருணாநிதி.

முதல்வர் கருணாநிதியின் கதை - வசனத்தில் 'பெண்சிங்கம்' படம் தயாராகி வருகிறது. உதய்கிரண், மீராஜாஸ்மின் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜெ.நந்தினி ஆர்ட்ஸ் சார்பில் ஆறுமுகனேரி எஸ்.பி.முருகேசன் தயாரிக்கிறார். பாலிஸ்ரீரெங்கன் இயக்குகிறார்.

இப்படத்துக்காக தேவா இசையில் முதல்வர் கருணாநிதி பத்தே நிமிடங்களில் டூயட் பாடலொன்றை எழுதியுள்ளார். அந்தப் பாடல்:

பல்லவி

சூர்யா: ஆகா! வீணையில் எழுவது வேணு கானமா?
திருவாடுதுறையின் தோடி ராகமா?
திருவெண்காட்டு மகுடி நாதமா?
இசைவதாலே இணையும் ஈருயிர்கள்;
இணைந்த பின்பு இரண்டும் ஒருயிர் தானே?
மேகலா: இசைவதாலே இணையும் ஈருயிர்கள்;
இணைந்த பின்பு இரண்டும் ஒருயிர் தானே?

முதல் சரணம்

சூர்யா: காலை அரும்பி!
மாலை மலரும்!
காதல் நோயால் நானும் உருகினேன்!

மேகலா: காலை அரும்பி!
மாலை மலரும்!
காதல் நோயால் நானும் உருகினேன்!

சூர்யா: கோகில வாணி நீயே;
கொடுமுடி கோகிலம் தானே?
கொள்ளை கொண்டாய் நெஞ்சத்தினை
கொடுத்து விடு எடுத்தபடியே!

மேகலா: தேனும் பாலும் கலந்த பின்னே
தனியே சுவையை பிரிக்கலாகுமா?

சூர்யா: இனிக்கும் தேனாய் நீயும்
துடிக்கும் ஆண் பாலாய் நானும்
திருமணம் ஆன பின்னால்
தேனும் பாலும் ஆகலாம்!

மேகலா: ஆயிரம் இரவுகள் உண்டு எப்போதும்!
பாயிரம் பாடினால் போதும் இப்போது!

இருவரும்: செம்புலப் பெய் நீர் போல
அன்புடை நெஞ்சால் நாம் கலந்தோமே!
ஆகா! வீணையில் எழுதுவது வேணு கானமா?
திருவாடுதுறையின் தோடி ராகமா?
திருவெண்காட்டு மகுடி நாதமா?
இசைவதாலே இணையும் ஈருயிர்கள்;
இணைந்த பின்பு இரண்டும் ஒருயிர் தானே?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X