உன்னால் முடியும் பெண்ணே!

பெண்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்த நிகழ்ச்சியில், பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்து, வெற்றி பெற்ற பெண்மணிகள், எத்தகைய சூழ்நிலையில் இந்த உன்னத சாதனைகள் படைத்தார்கள் என்ற அனுபவ பகிர்வினை மெகா டிவி நேயர்களிடையே உணர்வுப் பூர்வமாக பகிர்ந்து கொள்கின்றனர்.
உன்னால் முடியும் பெண்ணே நிகழ்ச்சி, பெண்களாலும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை வளர்க்கும் நிகழ்ச்சியாக அமைந்துள்ளது.
தன்னம்பிக்கையுடன் சாதனை புரிந்த டாக்டர் சாந்தா, ஆச்சி மனோரமா, புளியூர் சரோஜா, தடகள வீராங்கனை சைனி வில்சன், எழுத்தாளர் அனுராதா ரமணன், இசை குயில் சித்ரா இவர்களை தொடர்ந்து, இந்த வாரம் (11.5.2008) பிரபல எழுத்தாளர் சிவசங்கரி அவர்களிடையே உணர்வுப்பூர்வமாக கலந்துரையாடுகிறார் சின்னத்திரை நடிகை ஐஸ்வர்யா.
பெண்களுக்கும், இளைய தலைமுறையினருக்கும், வழிக்காட்டும் இந்த உன்னால் முடியும் பெண்ணே நிகழ்ச்சி ஞாயிறு நண்பகல் 12.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.


Click it and Unblock the Notifications











