இன்று 4 படங்கள் ரிலீஸ்!

By Chakra

Hema Malini
தீபாவளி, பொங்கலுக்குக் கூட ஓரிரு படங்கள் ரிலீஸாவதே பெரிய விஷயம் என்ற சூழலில், இன்று வெள்ளிக்கிழமை கோடை ஸ்பெஷலாக 4 புதிய படங்கள் வெளியாகி்ன்றன.

ராம நாராயணன் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியாகும் குட்டிப் பிசாசு இதில் முதலிடத்தில் உள்ளது. 11 திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்துக்கு அடுத்த மூன்று தினங்களுக்கு முன்பதிவு திருப்திகரமாக உள்ளதாக அபிராமி மெகா மால் தெரிவித்துள்ளது.

குழந்தைகளுடன் பார்க்கும் பொழுதுபோக்குப் படம் என்ற இமேஜ் இந்தப் படத்துக்கு உள்ளதால், சத்யம், ஐநாக்ஸ், பிவிஆர் என மல்டிப்ளெக்ஸ்களிலும் முன்பதிவு நன்றாக இருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. இது ராம நாராயணனின் 120 வது படம். கிட்டத்தட்ட 8 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு அவர் இயக்கியுள்ள படம்.

இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் படமும் இன்று வெளியாகிறது. சிம்பு தேவன் இயக்கியுள்ள கௌபாய் படம். ஏகப்பட்ட நட்சத்திரங்கள். சிறுவர்களைக் கவரும் அம்சங்களுடன் தயாராகியிருப்பதாக விளம்பரம் செய்திருக்கிறார்கள். ஐபிஎல் போட்டிகளால் கிட்டத்தட்ட 2 மாதங்கள் இதன் ரிலீஸ் தள்ளிப்போய் இன்று வெளியாகிறது.

இன்று வெளியாகும இன்னொரு படம் கோரிப்பாளையம். மாயாண்டி குடும்பத்தார் இயக்குநர் ராசு மதுரவன் படம் என்பதால் ஓரளவு எதிர்ப்பார்ப்பு உள்ளது. பப்ளிசிட்டியும் நன்றாக உள்ளது. படத்தின் டிசைன்களைப் பார்த்தால் ரேணிகுண்டா மாதிரி தெரிகிறது. மாத்தியோசி லெவலுக்கு இல்லாமலிருந்தால் சரி.

இன்று வெளியாகும் இன்னொரு படம் குரு சிஷ்யன். பெரிதாக சொல்லிக் கொள்ள ஒன்றுமில்லை. அது இயக்குநருக்கும் தெரிந்திருப்பதாலேயே ஹேமமாலினி என்ற ஸ்ருதியின் கவர்ச்சியை மட்டும் விளம்பரப்படுத்தி வருகிறார் போலிருக்கிறது!.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X