'நயன் போனால் போகட்டும்'

By Staff

Nayanatara
நயனதாரா போனால் போகட்டும், வேறு ஹீரோயினைத் தேடிக் கொள்கிறோம் என்று பையா படத் தயாரிப்பாளர் போஸ் தெரிவித்துள்ளார்.

லிங்குசாமி இயக்கும் இந்தப் படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நயனதாரா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

லிங்குசாமியின் அண்ணன் போஸ் தயாரிக்கும் படம் இது.

இப்படத்தில் நடிக்க ரூ 1கோடிக்கும் அதிகமாக நயனதாராவுக்கு சம்பளம் பேசப்பட்டது. இதுவரை எந்த நடிகைக்கும் இவ்வளவு அதிக சம்பளம் தராததால் இது தமிழ் திரையுலகினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சம்பளத்தை குறைக்கக் கூறியதால் லிங்குசாமி படத்திலிருந்து விலகுவதாக நயனதாரா அறிவித்தார். இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தயாரிப்பாளர் போஸ் கூறியதாவது:

நயனதாராவுக்கு தருவதாக ஒப்புக்கொண்ட சம்பளத்தை, சமீபத்தில் குறைத்துக்கொள்ள சொன்னது உண்மைதான். அதில் எந்தத் தவறும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

சமீபகாலமாக பெரிய பட்ஜெட் படங்களின் வசூல் 50 சதவீதம் குறைந்திருக்கிறது. அதேபோல் வியாபாரமும் பாதியாக குறைந்திருக்கிறது. எனவே படங்களின் பட்ஜெட்டை குறைக்கும்படி தயாரிப்பாளர் சங்கமே கேட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில்தான் நயனதாராவிடம், இப்போதுள்ள சூழலுக்கு ஏற்ப சம்பளத்தை குறையுங்கள் என்று கூறினோம். அவர் மறுத்துவிட்டார்.

அட்வான்ஸைத் திருப்பித் தரவேண்டும்!

மேலும் கால்ஷீட்டை வீணாக்கிவிட்டோம் என்றும் கூறி இருக்கிறார். எங்கள் பட ஹீரோ கார்த்தி மற்றொரு படத்தில் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு முடிவடையவில்லை. அதனால் எங்கள் படத்துக்கு கார்த்தியால் வர இயலவில்லை.

அவர் இல்லாமல் படப்பிடிப்பு தொடங்க முடியாது என்பதால்தான் நயனதாராவிடம் எங்களுக்கு வழங்கிய தேதியை வேறு படத்துக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றோம். அவருக்கு வேறு படம் எதுவும் கையில் இல்லை. இதில் எங்கள் தவறு எதுவுமில்லை. இதுதான் நடந்தது.

இந்நிலையில்தான் எங்கள் படத்திலிருந்து விலகுவதாக கூறியிருக்கிறார் நயனதாரா. பரவாயில்லை. அவர் தாராளமாக விலகிக் கொள்ளட்டும். ஆனால் அட்வான்ஸைத் திருப்பித் தந்துவிட வேண்டும்.

அவருக்கு பதிலாக மற்றொரு முன்னணி நடிகையை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. இரண்டு நாளில் அது முடிவாகிவிடும். தமிழ் சினிமா என்பது நயனதாரா மட்டுமே அல்ல... என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X