சிம்பு படத்தில் கெளதம் மேனன்
சிம்புவை வைத்து இயக்கிய கெளதம் மேனன் இப்போது சிம்புவுக்காக அவரது புதிய படத்தில் சின்ன கேரக்டரில் நடிக்கிறாராம்.
சிம்புவை புதிய கோணத்தில் காட்டியவர் கெளதம் மேனன். விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் அவருடைய கேரக்டர் வெகுவாக பாராட்டுக்களை அள்ளியது.
இந்த நிலையில் தற்போது சிம்புவுக்காக அவர் நடிக்கும் படத்தில் கெளரவ வேடத்தில் நடிக்கவுள்ளார் கெளதம் மேனன்.
சிம்பு நடித்து வரும் புதிய படம் போடா போடி. படத்தின் ஷூட்டிங் போய்க் கொண்டிருக்கிறது. ஜோடியாக நடிப்பவர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி. இப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டருக்காக ஆளைத் தேடியுள்ளனர். சிம்புவின் மனதில் கெளதம் வரவே, அவரிடம் நேரடியாக கேட்டு சம்மதிக்க வைத்து நடிக்க வைத்துள்ளாராம்.
கெளதம் கேமராவுக்கு முன்பு தலை காட்டுவது இது புதிதல்ல. வேட்டையாடு விளையாடு படத்தில் ஒரு பாடல் காட்சியில் குரூப் டான்சர்களோடு சேர்ந்து சில விநாடிகள் தலை காட்டியிருந்தார் முன்பு.
இருந்தாலும் அவர் ஒரு கேரக்டரில் நடிக்கவிருப்பது இதுவே முதல் முறையாகும்.


Click it and Unblock the Notifications











