கோவாவில் ரஜினி - ஐஸ்வர்யா டூயட்!!

ஆம்... இங்குதான் ரஜினியின் எந்திரன் - தி ரோபோ படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
சுற்றிலும் பரபரப்பு, திரண்டு வரும் ரசிகர் வெள்ளம், அனைத்துக்கும் மத்தியில் அமைதியாய் அமர்ந்திருக்கிறார் ரஜினிகாந்த். குசேலனில் பார்த்தது போன்ற பரபரப்பான பாதுகாப்பு கூட இல்லை.
தனக்கென உதவியாளர்கள் யாரையும் வைத்துக்கொள்ளாத ரஜினி, படப்படிப்பு முடிந்து தனது கேரவனுக்குத் திரும்பும்போதுகூட தனக்குத் தானே குடைப் பிடித்துக் கொண்டு நடந்து போகும் அளவுக்கு எளிமையைக் கடைப்பிடிப்பது, அவரைப் பற்றிய மதிப்பீடுகளை பெரிதும் உயர்த்திவிட்டதாக, முன்னணி ஆங்கில நாளிதழ் இன்று கட்டுரை வெளியிட்டுள்ளது.
இன்னும் 10 நாட்கள் கோவாவில் எந்திரன் படப்பிடிப்பு நடக்கிறது. இதில் ஒரு பாடலும், சண்டைக் காட்சிகளும் படமாக்கப்பட உள்ளன.
இந்தப் படத்தில் உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானியாகவும், ரோபோவாகவும் இரு வேடங்களில் நடிக்கிறார் ரஜினி. நிலா என்ற பெயரில் வரும் ஐஸ்வர்யா ராய் ரஜினிக்கு இணையான முக்கியத்துவம் கொண்ட பாத்திரத்தில் நடிக்கிறார்.
கோவா படப்பிடிப்பு இடைவேளையில் எடுக்கப்பட்ட சில புகைப் படங்களைத்தான் இங்கே காண்கிறீர்கள்.


Click it and Unblock the Notifications











