சச்சினுக்குப் பதில் ரஜினி?

By Staff

Rajini
இந்திய கிரிக்கெட் டீமில்தான் இந்த மாற்றங்களைச் செய்துவிட்டார்களோ என திகைக்க வேண்டாம்.

சச்சின் நடிப்பதாக இருந்த ஒரு படத்தில் அவருக்குப் பதில் இப்போது நமது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கப் போகிறாராம்.

இது 'ச்சும்மா' கெஸ்ட் ரோல்தான்... அதுவும் விநாயகரைப் பற்றிய படம் என்பதால் நடிக்க ரஜினியும் ஒப்புக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

விக்னஹர்த்தா ஸ்ரீ சித்திவினாயக் எனும் தலைப்பில் யஷ்வந்த் இங்கவேல் எனும் இயக்குநர் ஒரு பிரமாண்ட படத்தைத் தயாரித்து இயக்குகிறார். மும்பையில் உள்ள பிரபல சித்திவினாயகர் ஆலயம் பற்றிய பக்திப் படம் இது.

இந்தப் படத்தில் கிட்டத்தட்ட அனைத்து பாலிவுட் பிரபலங்களுமே நடிக்கிறார்கள். அஜய் தேவ்கன், காஜோல் ஜோடியாக நடிக்க, அமிதாப், விவேக் ஓபராய், சல்மான்கான், ராணி முகர்ஜி, ப்ரீத்தி ஜிந்தா, வித்யா பாலன் என பெரும் நட்சத்திரப் பட்டாளம் அணிவகுத்து நிற்கிறது. இவர்களில் பெரும்பாலானோர் தாங்களாகவே முன் வந்து இப்படத்துக்குக் கால்ஷீட் கொடுத்துள்ளனராம்.

இந்நிலையில் ஒரு முக்கிய வேடத்தில் கிரிக்க்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரும் நடிப்பதாக ஒப்புக் கொண்டிருந்தார். இதுகுறித்து பெரிய அளவில் செய்திகளும் வெளியாகின.

இப்போது சச்சினுக்கு முழங்காலில் அடிபட்டிருப்பதால் படத்தில் நடிக்க முடியாத நிலை.

உடனே அந்த முக்கியமான வேடத்தில் நடித்துத் தருமாறு சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் கேட்டுக் கொண்டுள்ளார் இயக்குநர். இதற்கு ரஜினியும் மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டுள்ளாராம்.

செப்டம்பர் 14-ம் தேதி பூஜையுடன் படப்பிடிப்புத் தொடங்குகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X