திருமலையில் இன்று ரம்பா திருமணம்... பலத்த பாதுகாப்பு ஏற்பாடு!

இந்த திருமணத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, பெங்காலி மற்றும் போஜ்புரி திரைப்படத்துறையினர் மற்றும் சின்னத்திரை நடிகர்- நடிகைகள் ஏராளமானோர் பங்கேற்கின்றனர்.
நடிகை ரம்பா மற்றும் மணமகன் குடும்பத்தினர் ஏற்கெனவே திருமலையில் தங்கியுள்ளனர்.
முன்னதாக நேற்று காலை நடிகை ரம்பா தனது குடும்பத்தினருடன் ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். மாலை அவருக்கு பெண்ணழைப்பு சடங்குகள் நடக்கின்றன.
இன்று திருமணத்துக்கு வருபவர்களுக்கு காலையில் 15 வகை சிற்றுண்டிகளும், பிற்பகல் 35 வகையான அறுசுவை விருந்தும் வழங்கப்படுகிறது.
திருமணத்திற்கு அதிகமாக நடிகர் நடிகைகள் வருவார்கள் என்பதால் முன் எச்சரிக்கையாக திருமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தனக்கு திருமணம் கூடி வந்தால், திருமலையில் செய்து கொள்வதாக ரம்பா வேண்டிக் கொண்டிருந்தாராம். அதனால்தான் இங்கு திருமண ஏற்பாடுகள் செய்துள்ளார்களாம்.


Click it and Unblock the Notifications











