twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குழந்தைகள் ரம்லத்திடம் இருக்க வேண்டும்! - விவாகரத்து தீர்ப்பு விவரம்

    By Shankar
    |

    Ramlath
    சென்னை: பிரபு தேவா - ரம்லத் விவாகரத்துக்குப் பிறகு குழந்தைகள் இருவரும் ரம்லத்திடமே இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

    பிரபு தேவா - ரம்லத்துக்கு இன்று சென்னை முதன்மை அமர்வு குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து வழங்கப்பட்டது.

    ரூ 10 லட்சம்...

    தீர்ப்பை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ராஜா சொக்கலிங்கம் வாசித்தார்.

    அந்த தீர்ப்பில் கூறியுள்ளதாவது:

    "இப்போது ரம்லத்தின் பராமரிப்பு மற்றும் உடனடி தேவைகளுக்காக ரூ10 லட்சத்தை ரமலத்துக்கு ஒரே தவணையில் பிரபு தேவா வழங்க வேண்டும்.

    குழந்தைகள் ரிஷி ராகவேந்திர தேவா, ஆதி தேவா ஆகியோர் ரமலத்திடம் இருக்க வேண்டும். அதேசமயம் குழந்தைகளை எப்போது வேண்டுமானாலும் பார்ப்பதற்கும், வெளியே அழைத்துச் செல்வதற்கும் பிரபுதேவாக்கு உரிமை உண்டு.

    குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பாக முடிவுகளில் பிரபு தேவாவையும் ரம்லத் கலந்து ஆலோசிக்கலாம்," என்றும் அவர் தெரிவித்தார்.

    அண்ணா நகரில் வீடு, கிழக்குக் கடற்கரை சாலை நிலம், ஹைதராபாதில் இரு சொத்துகள் போன்றவற்றை இந்த விவாகரத்துக்கு ஈடாக ரம்லத்துக்கு கொடுத்துள்ளார் பிரபு தேவா.

    English summary
    In its divorce judgement, the Madras Family Court ordered Prabhu Deva to hand over a cheque for Rs 10 lakh in a single payment for maintenance.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X