செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ்!

இப்போது ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வரும் செல்வராகவன், அடுத்ததாக விவேக் ஓபராயை வைத்து இந்தியில் தனது 7ஜி ரெயின்போ காலனியை ரீமேக் செய்யும் திட்டத்திலிருந்தார்.
ஆனால் திடீரென தனது திட்டத்தை மாற்றிக் கொண்ட செல்வா, அடுத்த படத்தையும் தமிழிலேயே உருவாக்கப்போகிறார். புதுமையான கதை ஒன்று கிடைத்திருப்பதால், அதில் தனுஷை கதாநாயகனாக வைத்து இயக்குகிறாராம்.
படத்தைத் தயாரிக்கப் போவது வேறு யாருமல்ல, அவர்களது தந்தை கஸ்தூரிராஜாதான்.
துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டைக்குப் பிறகு மகன்கள் இருவரையும் இணைத்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறது ஆர்கே பிலிம்ஸ்.
மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தின் நாயகி மற்றும் தொழில்நுடப்க் கலைஞர்கள் குறித்து அடுத்த வாரம் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.
படத்துக்கு இசை யுவன் ஷங்கர் ராஜாதானே?


Click it and Unblock the Notifications











