3 இடியட்ஸ் வேலைகளில் பிஸியாகும் ஷங்கர்!
எந்திரன் என்ற மெகா பிரமாண்டப் படத்தைக் கொடுத்த ஷங்கர், அடுத்து முழுவீச்சில் 3 இடியட்ஸ் ரீமேக்கில் இறங்குகிறார்.
விஜய், ஜீவா மற்றும் சித்தார்த் நடிக்கும் இந்தப் படத்தை ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரிக்கிறது.
பொதுவாக மற்றவர்கள் தயாரிக்கும் படத்தை வாங்கி, அதன் டைட்டிலை விடப் பெரிதாக 'சன் பிக்ஸர்ஸ் கலாநிதிமாறன் வழங்கும்' என்று பெயர் போட்டு வெளியிடுவது சன் பிக்சர்ஸ் வழக்கம்.
ஆனால் எந்திரனைப் பொறுத்தவரை இந்தியா முழுவதும் வெளியிட்டவர்கள் இந்த ஜெமினி நிறுவனம்தான். போஸ்டரின் மூலையில்தான் இந்த நிறுவனம் தன் பெயரைப் போட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
இப்போது ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற இந்திப் படம் 3 இடியட்ஸை ரீமேக் செய்கிறார். இதில் அமீர்கான் வேடத்தைச் செய்யப் போகிறவர் விஜய்.
மாதவன் வேடத்தில் ஜீவாவும், ஷர்மான் ஜோஷி பாத்திரத்தில் சித்தார்த்தும் நடிக்கிறார்கள்.
ஷங்கர் இயக்கும் முதல் ரீமேக் 3 இடியட்ஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் மும்பையில் நடந்த எந்திரன் / ரோபோ பிரிமியர் காட்சிக்கு அமீர் கான், ராஜ்குமார் ஹிராணி மற்றும் தயாரிப்பாளர் விது வினோத் சோப்ரா ஆகியோர் வந்திருந்தபோது, இந்தப் படத்தின் ரீமேக் குறித்தும் நீண்ட நேரம் விவாதித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











