மறுக்கும் ஷோபா-பிரகாஷ் ராஜ்!

பிரகாஷ் ராஜ் மற்றும் ஷோபா ராணி இருவரும் திருமணம் செய்துகொண்டதாக இணையங்களிலும் பத்திரிகைகளிலும் தொடர்ந்து செய்திகள் மற்றும் திருமணக் கோல புகைப்படங்கள் வெளியாகின.
ஆனால் இந்தச் செய்தி பொய்யானது என்றும், புகைப்படங்கள் ஒட்டு வேலை செய்யப்பட்டவை என்றும் ஷோபா ராணி கூறியுள்ளார்.
"நான் பிரகாஷ்ராஜை சந்தித்திருக்கிறேன். அவர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கும் போயிருக்கிறேன். அது வெறும் நட்பு மட்டுமே..." என்கிறார் ஷோபா ராணி.
கடந்த ஆண்டு தனது கணவர் மீது போலீஸில் புகார் கொடுத்து உள்ளே தள்ளிய ஷோபா, இப்போது தனியாக வசித்து வருகிறார்.
பிரகாஷ் ராஜும் தனது இந்த திருமண செய்தியை மறுத்துள்ளார். தனது விவாகரத்து விண்ணப்பம் கோர்ட்டில் உள்ள நிலையில் இந்த மாதிரி செய்திகள் வருவது விரும்பத்தக்கதல்ல என்று அவர் கூறியுள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications