Don't Miss!
- Automobiles ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!
- Finance வாரம் 2 நாள் லீவு கதையெல்லாம் மலையேறிவிட்டது.. இனி 6 நாள் வேலை.. சாம்சங் அறிவிப்பால் ஷாக்..!!
- News பாஜகவுக்கு பலத்த அடி? 40 வருஷம் பிறகு உ.பி.யின் அம்ரோஹா காங்கிரஸ் வசமாகிறதா?
- Sports இனி 14 கோடி சிஎஸ்கே வீரருக்கு டாடா பைபை.. பழைய ஆல் - ரவுண்டர் பக்கம் திரும்பிய பிளெம்மிங்
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
சீதை வேடத்தில் நயனதாரா!
தெலுங்கில் ராமராஜ்ஜியம் என்ற பெயரில் புராணப்படம் உருவாகிறது. இதில் ராமர் வேடத்தில் என்டிஆர் பாலகிருஷ்ணா நடிக்கிறார். சீதை வேடத்தில் நயனதாராவை புக் செய்தனர்.
ஆனால் இதற்கு தெலுங்குத் திரையுலகிலேயே எதிர்ப்பு கிளம்பியது. பிரபுதேவாவுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டுள்ளார் நயனதாரா. இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்குகளையும் சந்தித்து வருகிறார். இப்படிப்பட்டவரைப் போய் சீதை வேடத்தில் நடிக்க வைப்பதா என்று எதிர்ப்புக் குரல்கள் எழும்பின.
இதையடுத்து சீதை வேடத்திற்கு நயனதாராவை போடுவது குறித்து தயாரிப்பாளர் தரப்பு மறு பரிசீலனை செய்வதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் தற்போது நயனதாராவையே சீதை வேடத்தில் நடிக்க வைப்பது என தீர்மானித்து விட்டார்களாம். திட்டமிட்டபடி இப்படம் உருவாகிறது, கேரக்டர்களுக்கு ஏற்கனவே முடிவு செய்யப்பட்டவர்களே தொடர்ந்து நடிக்கவிருப்பதாகவும் படத் தயாரிப்புக் குழு கூறுகிறது.
இருப்பினும் இப்படத்தை தமிழில் டப் செய்யும் ஐடியா ஏதும் இல்லையாம் படக் குழுவினருக்கு.