'தில்லாலங்கிடி' ஜெயம் ரவி!

இந்தப்படம், தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற கிக்-கின் தழுவல்.
தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக தமன்னா நடிக்கிறார். படத்தின் வில்லனாக, ஒரிஜினல் தெலுங்குப் படத்தில் நடித்த ஷாம் நடிப்பார் எனத் தெரிகிறது.
சந்தானம் நகைச்சுவைக்குப் பொறுப்பேற்றுள்ளார்.
யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தை, எடிட்டர் மோகன் ஜெயம் கம்பெனி சார்பில் தயாரிக்கிறார்.
இந்தப் படத்துக்காக பொருத்தமான பல தலைப்புகளைத் தேடிய இயக்குநர் ராஜா, இறுதியில் தில்லாலங்கிடி என்ற தலைப்பு பொறுத்தமாக இருப்பதாகக் கூறி தேர்வு செய்தார். இந்தத் தலைப்பு விநியோகஸ்தர்களுக்கும் மிகவும் பிடித்துவிட்டதாம்.
ஆகஸ்ட் இறுதியில் படப்பிடிப்பு துவங்குகிறது.
Comments


Click it and Unblock the Notifications