சிறந்த நாயகி-குஷ்பு: தொடர்-செல்வி: குணச்சித்திரம்-தேவிப்பிரியா

By Staff

Radhika in Selvi
தமிழக அரசின் 2006ம் ஆண்டுக்கான சின்னத்திரை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிறந்த மெகா சீரியலாக சன் டிவியில் ஒளிபரப்பாகும் செல்வியும், சிறந்த ஹீரோயினாக குஷ்புவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

சின்னத்திரை தொடர்கள், நடிகர், நடிகையர், மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கான விருதுகளை தேர்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி மருதமுத்து தலைமையில் விடுதலை, வசந்த், கண்மணி சுப்பு, டி.வி.சங்கர், ராஜசேகர், செய்தித்துறை செயலாளர், இயக்குநர், இணை இயக்குநர் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

குழு மொத்தம் 14 தொலைக்காட்சித் தொடர்களைப் பார்வையிட்டு
விருதுக்குரியவர்களை இந்தக் குழு தேர்வு செய்துள்ளது.

அதன் விவரம்:

சிறந்த நெடுந்தொடர்: 'செல்வி' (ராடன் டிவி நிறுவன தயாரிப்பு)- முதல் பரிசு- ரூ.2 லட்சம்

'சொர்க்கம்' (ஏ.வி.எம் தயாரிப்பு)- 2ம் பரிசு- ரூ.1 லட்சம்

சிறந்த வாரத் தொடர்- 'அல்லி ராஜ்யம்' (விகடன்
டெலிவிஸ்டாஸ்)- 3ம் பரிசு- ரூ.1 லட்சம்

சிறந்த சாதனையாளர்- 'கோலங்கள்' இயக்குனர் திருச்செல்வம்- பரிசு ரூ.1 லட்சம்.

வாழ்நாள் சாதனையாளர்-ராணி சோமநாதன்-பரிசு ரூ.1
லட்சம்

சிறந்த கதாநாயகன்- அபிஷேக் (தொடர்- 'மலர்கள்')
சிறந்த கதாநாயகி- குஷ்பு ('கல்கி')
சிறந்த குணச்சித்திர நடிகர்- டெல்லிகுமார் ('ஆனந்தம்')
குணச்சித்திர நடிகை- தேவிப்பிரியா ('சொர்க்கம்')
வில்லன் நடிகர்- அஜய் ('கோலங்கள்')
வில்லன் நடிகை- பிருந்தா தாஸ் ('ஆனந்தம்')
குழந்தை நட்சத்திரம்- மாஸ்டர் பரத் ('மை டியர் பூதம்')
சிறந்த இயக்குனர்- சமுத்திரக்கனி ('செல்வி')
கதையாசிரியர்- தேவிபாலா ('ஆனந்தம்')
திரைக்கதை ஆசிரியர்- ராஜ்பிரபு ('செல்வி')
உரையாடல் ஆசிரியர்- குமரேசன் ('அகல்யா')
ஒளிப்பதிவாளர்- மாடசாமி ('மலர்கள்')
படத்தொகுப்பாளர்- பிரேம் ('லட்சுமி')
பின்னணி இசையமைப்பாளர்- கிரண்
பின்னணி குரல் (ஆண்) - ரவிசங்கர்
பின்னணி குரல் (பெண்)- பிரமிளா
சிறந்த தந்திர காட்சியாளர்- ஈஸ்வர் ('சிந்துபாத்')

இவர்கள் அனைவருக்கும் தலா 5 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

சிறந்த குணசித்திர நடிகைக்கான விருது பெறும் தேவிப்ரியா தான் கடந்த ஆண்டு கசமுசா விவகாரத்தில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X