விஜயகாந்துடன் இணையும் விக்ரமன்!

By Staff

Vijaykanth with Meena
விக்ரமனும், விஜயகாந்த்தும் மீண்டும் இணையவுள்ளனர்.

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு இரு 'வி' க்களும் இணைந்து இன்னொரு 'விக்டரி'க்காக உழைக்கவுள்ளனர்.

1999ம் ஆண்டு விஜயகாந்த்தும், விக்ரமனும் இணைந்து கொடுத்த வானத்தைப் போல, மாபெரும் வெற்றியைப் பெற்ற படம். ரஜினியின் படையப்பா வசூலை சமன் செய்து சாதனையும் படைத்தது.

இந்தப் படத்திற்குப் பிறகு விஜயகாந்த்தின் இமேஜும் பெருமளவில் உயர்ந்தது. இந்த நிலையில், மீண்டும் விக்ரமனும், விஜயகாந்த்தும் இணையவுள்ளனர்.

அரசாங்கம் திருப்திகரமான முறையில் ஓடிய குஷியில் இருக்கும் விஜயகாந்த், அடுத்து விக்ரமனுடன் இணைகிறார். இப்படத்துக்காக கால்ஷீட்டை மொத்தமாக கொடுத்துள்ளாராம் விஜயகாந்த்.

தற்போது எங்கள் ஆசான் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் விஜயகாந்த் அதை முடித்து விட்டு விக்ரமன் படத்திற்கு வருகிறார்.

இந்தப் படமும், வானத்தைப் போல படத்தைப் போல குடும்பக் கதைதான் என்கிறார் விக்ரமன். பெண்களைக் கவரும் வகையில் இப்படம் அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அம்மா கிரியேஷன் தயாரிக்கவுள்ள இப்படம் குறித்த பிற தகவல்கள், கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் வெளியாகவுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X