சென்னை ஸ்டார் கிரிக்கெட் - விக்ராந்த் சதமடித்தார்
சென்னையில் இன்று காலை நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் நடிகர் விக்ராந்த் கோலிவுட் அணி சார்பில் ஆடி சதம் போட்டார்.
தமிழ் திரையுலகம் மற்றும் தெலுங்குத் திரையுலகைச் சேர்ந்த பிரபல நடிகர்கள் பங்கேற்கும் ஸ்டார் கிரிக்கெட் போட்டி இதற்கு முன்பு இரு முறை நடந்தது. அந்த போட்டிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்த நிலையில் தற்போது 3வது முறையாக இன்று காலை சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில் இரு அணிகளுக்கும் இடையிலான ஒரு நாள் போட்டி நடந்தது.
சென்னை அணிக்கு சென்னை வாரியர்ஸ் எனவும், ஆந்திர அணிக்கு ஆந்திரா கிங்ஸ் எனவும் பெயரிட்டிருந்தனர்.
காலை 10 மணிக்கு போட்டி தொடங்கியது. திமுக எம்.பி. கனிமொழியை போட்டியைத் தொடங்கி வைத்தார்.
இதில் சென்னை அணி டாஸ் வென்றது. இதையடுத்து சென்னை அணியின் கேப்டன் ரமணா, பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
சென்னை அணியில் இடம் பெற்றுள்ள நடிகர் விக்ராந்த் அபாரமாக ஆடி சதம் போட்டார். சென்னை அணியில், சிம்பு, பரத், ஸ்ரீகாந்த், விஷ்ணு, ரித்தீஷ், ஜீவா, ஆர்யா, ஜித்தன் ரமேஷ் ஆகியோரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











