டிசம்பர் 10ல் ரஜினி-லதா தம்பதிக்கு அறுபதாம் கல்யாணம்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கும், அவருடைய மனைவி லதா ரஜினிகாந்துக்கும் அறுபதாம் கல்யாணம் வருகிற 10ந் தேதி (வெள்ளிக்கிழமை) சென்னையில் நடக்கிறது.
ரஜினிக்கு வருகிற 12ந் தேதி 60 வயது முடிவடைந்து, 61-வது வயது பிறக்கிறது. இதையொட்டி அவருக்கும், அவருடைய மனைவி லதா ரஜினிகாந்துக்கும் அறுபதாம் கல்யாணம் செய்து வைக்க அவரது மகள்கள் மருமகன்கள் மற்றும் உறவினர்கள் முடிவு செய்திருக்கிறார்கள்.
அதன்படி, ரஜினிகாந்த் - லதா ரஜினிகாந்த் தம்பதியின் அறுபதாம் கல்யாணம் வருகிற 10ந் தேதி (வெள்ளிக்கிழமை) சென்னை போயஸ்க கார்டனில் உள்ள அவர்களின் வீட்டில் நடக்கிறது.
அன்று காலை 10 மணிக்கு நிகழ்ச்சிகள் தொடங்குகிறது. புரோகிதர்கள் மந்திரம் ஓத, மங்கள வாத்தியங்கள் முழங்க, ரஜினிகாந்துக்கும் லதா ரஜினிகாந்துக்கும் அறுபதாம் கல்யாணம் நடக்கிறது. இந்த விழாவில், நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் கலந்து கொள்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











