சின்னத்திரையில் ஓர் வெள்ளித்திரை

வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணிக்கு மெகா டிவியில் ஒளிபரப்பாகும் இந்த புதிய நிகழ்ச்சியில் வெள்ளித்திரைக்கு அறிமுகமாகியுள்ள திரைப்படங்களை பற்றி நேயர்கள் நேரடியாக தங்களது கருத்துக்களையும், விமர்சனங்களையும் தொலைபேசி வழியாக பரிமாறிக் கொள்கின்றனர்.
நேயர்கள் புதிய திரைப்படங்களை திரையரங்கிற்குச் சென்று பார்த்த பின்பு அந்த படத்தில் அவர்களுக்கு பிடித்த காட்சிகள், பாடல்கள், விரும்பாத காட்சிகள், படத்திற்கு பொருந்திய, பொருந்தாத காட்சிகள், படத்தின் க்ளைமேக்ஸ் குறித்து விரிவாக விமர்சனம் செய்கின்றனர்.
மேலும் படத்தின் கதை அமைப்பு மற்றும் முடிவு காட்சிகள் எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று திரை உலகினருக்கு தமது கருத்துக்களையும் எடுத்துரைக்கின்றனர்.
சின்னத்திரைக்கு அறிமுகமாகி இருக்கும் கிருபா இந்த நிகழ்சியை தொகுத்து வழங்குகிறார்.
Comments


Click it and Unblock the Notifications