கேன்ஸ் திரைப்பட விழாவில் 'பில்லா'

உலகப்புகழ்பெற்ற கேன்ஸ் 61வது திரைப்பட விழா வரும் மே 14 முதல் 25ம் தேதி வரை நடைபெறுகிறது. பல்வேறு நாடுகளில் இருந்து சிறந்த படங்கள் அப்போது திரையிடப்படும்.
இதில் அஜீத் நடித்து சூப்பர் ஹிட்டாகியுள்ள பி்ல்லா படமும் இடம்பெற்றுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து 80களில் கலக்கிய வெற்றிப்படமான பில்லா படத்தின் ரீமேக் இது.
விழாவில் கலந்து கொள்வதற்காக வரும் 12ம் தேதியன்று படத்தின் இயக்குநர் விஷ்ணுவர்த்தனுடன் கேன்ஸ் புறப்பட்டுச் செல்வதாக அஜீத் தெரிவித்துள்ளார்.
விழாவில் திரையிடப்படும் முக்கிய படங்களில் பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் வெளியான 'இண்டியானா ஜோன்ஸ் அண்டு தி கிங்டம் ஆஃப் தி கிரிஸ்டல் ஸ்கல்' படத்தை பார்க்கப்போவதாகவும் அஜித் கூறியுள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications