பேஷன் ஷோ: அக்ஷய் பேண்ட் பட்டனை அவிழ்த்த ட்விங்கிள்- கைதாகலாம்!

By Staff

Akshay with wife Twinkle
பேஷன் ஷோவில் மேடையில் நடந்து வந்த அக்ஷ்ய் குமாரின் ஜீன்ஸ் பேண்ட் பட்டனை அவரது மனைவி ட்விங்கள் கண்ணா அவிழ்த்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதுதொடர்பாக சமூக சேவகர் கொடுத்த புகாரின் பேரில் இருவரையும் கைது செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

மார்ச் 31ம் தேதி மும்பையில் லக்மே பேஷன் வாரம் நடந்தது. இதையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேஷன் ஷோவில் அக்ஷய் குமார் கலந்து கொண்டு கேட்வாக் செய்தார்.

அப்போது அக்ஷய் குமார், பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்த ட்விங்கிளிடம் சென்றார். அவரிடம் பட்டனை கொஞ்சம் கழற்றி விடு என்று கூறினார். முதலில் ட்விங்கிள் தயங்கினார்.

ஆனால் அக்ஷய், ட்விங்கிளின் கையைப் பிடித்து தனது பேன்ட்டில் வைத்து பட்டனை கழற்றுமாறு கூறவே அவரும் சிரித்தபடி ஜீன்ஸ் பட்டனை கழற்றி விட்டார்.

நூற்றுக்கணக்கானோர் சூழ்ந்திருந்த அந்த இடத்தி்ல் பொது இடம் என்றும் பாராமல், அக்ஷய்யும், ட்விங்கிளும் நடந்து கொண்டது அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது. இருந்தாலும் கூடியிருந்த அத்தனை பேரும் அதை சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் அனில் நாயர் என்கிற சமூக சேவகரால் இந்த சம்பவத்தை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.

அக்ஷய் குமார், ட்விங்கள், போட்டி அமைப்பாளர்கள் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி போலீஸில் புகார் கொடுத்தார்.

இதன் பேரில் மும்பை போலீஸார் தற்போது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து உதவி ஆணையர் அரவிந்த் மஹாப்தி கூறுகையில், விரைவில் சம்பந்தப்பட்டவர்களை நாங்கள் கைது செய்யவுள்ளோம். அவர்களிடம் வாக்குமூலம் பெறுவோம் என்றார்.

இதுகுறித்து அக்ஷய்யின் செய்தித் தொடர்பாளர் சன்சிதா கூறுகையில், இதுவரை போலீஸாரிடமிருந்து எங்களுக்கு சம்மன் ஏதும் வரவில்லை. போலீஸார் எங்களை அணுகினால் நாங்கள் பதிலளிப்போம் என்றார்.

அக்ஷய் தம்பதி மீதான இந்தக் குற்றச்சாட்டுக்கள் ஜாமீனில் வரக் கூடியதே. குற்றவாளி என அக்ஷயும், ட்விங்கிளும் நிரூபிக்கப்பட்டால், 3 மாத சிறைத் தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே பிரச்சினைக்காக மீரட்டிலும் அக்ஷய் தம்பதி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மனைவி கையால் பட்டனை அவிழ்ப்பது சந்தோஷமே - அக்ஷய் பேச்சு

இதற்கிடையே பேஷன்ஷோவில் தான் நடந்து கொண்டது குறித்து ஒரு பத்திரிகைக்கு அக்ஷய் அளித்துள்ள பேட்டியில், அது ஜாலியாக இருந்தது. அதை நான் ரசித்தேன். மனைவி கையால் உங்களது ஜீன்ஸ் பட்டனை அவிழ்ப்பது எவ்வளவு சந்தோஷமானது தெரியுமா (!!).

இதில் என்ன தவறு இருக்கிறது. எல்லோருமே பட்டனைக் கழற்றத்தான் செய்கிறார்கள். யாராவது கழற்றி விடத்தான் செய்கிறார்கள் (!?!). இதெல்லாம் பெரிய விஷயமா?.

இது ரொம்பச் சாதாரணமான விஷயம். சிறிய விஷயம். எனது இடத்தில் யார் இருந்தாலும் இதைச் செய்திருப்பார்கள்.

இதை நான் திட்டமிட்டு செய்யவில்லை. தானாக நடந்தது. மனைவியை விட்டு பட்டனை கழற்ற வைக்க வேண்டும் என்று முன்பே யோசித்துக் கொண்டெல்லாம் நான் மேடைக்குப் போகவில்லை. மேடையில் ஏறிய பின்னர்தான் மனதில் இப்படித் தோன்றியது. செய்தேன் என்று கூறியுள்ளார் அக்ஷய்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X