நவ 27 முதல் யோகி!

சுப்பிரமணியம் சிவா இயக்கியிருக்கும் இப்படத்தில் அமீருக்கு ஜோடி நடிகை மதுமிதா.
சென்னையில் உள்ள குடிசை பகுதியை மையப்படுத்தி இந்தக் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
கதை குப்பத்தைச் சுற்றி என்றாலும், அதைச் சொல்லியிருக்கும் விதம் ஹாலிவுட் தரம் என்கிறார்கள் படத்தின் காட்சிகளைப் பார்த்தவர்கள். அதனால்தான் இந்தப் படத்தை தங்கள் பேனரில் வெளியிட விருப்பம் தெரிவித்திருந்தது சன் பிக்சர்ஸ்.
வருகிற 27ம்தேதி வெளியாகும் யோகியை சென்னை மற்றும் மதுரை நகரங்களில் மட்டும் தனது டீம்வொர்க் புரொடக்ஷன் மூலம் வெளியிடுகிறார் அமீர்.
யோகி வெளியான கையோடு தனது கனவுப் படைப்பான கண்ணபிரானைத் துவக்குகிறார் அமீர். இதில் ஹீரோ அமீரல்ல... ஜெயம் ரவி!
Comments


Click it and Unblock the Notifications