இசைக் குயில் ஆஷாவுக்கு வயது 75

இசைக் குயில் லதா மங்கேஷ்கரின் இளைய சகோதரிதான் ஆஷா போன்ஸ்லே. இன்று அவருக்கு 75வது பிறந்த நாள். தனது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கொண்டாடுகிறார் ஆஷா.
தனு பேரப் பிள்ளைகளுக்கு தனது கையால் இன்று பிடித்த பட்சனங்களை செய்து கொடுக்கப் போவதாக ஏற்கனவே கூறியிருந்தார் ஆஷா. மேலும் தனது புதிய இசை ஆல்பத்தையும் இன்று அவர் வெளியிடுகிறார்.
ஆர்.டி.பர்மன், ஓ.பி. நய்யார் ஆகிய மாபெரும் இசை மேதைகளுடன் இணைந்து பல புகழ் பெற்ற பாடல்களுக்கு உயிர் கொடுத்தவர் ஆஷா. உம்ரோ ஜான் படத்தில் அவர் பாடிய கஜல் பாடல்கள் வெகு பிரசித்தமானவை.
தமிழிலும் சில புகழ் பெற்ற பாடல்களைப் பாடியுள்ளார் ஆஷா. இளையராஜாவின் இசையில் பாடிய ஆராரோ ஆராரோ (ஆனந்த்), வித்யாசாகர் இசையில் பாடிய கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் (சந்திரமுகி) ஆகியவை பிரபலமானவை- மறக்க முடியாத மெலடி பாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments


Click it and Unblock the Notifications