சென்னையில் ஜப்பான் பட விழா

3 நாள் நடைபெறும் இந்தப் பட விழா 14ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்திய - ஜப்பான் திரைப்பட விழாவின் ஒரு பகுதியாக இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திரைப்பட விழாவை ஜப்பான் துணைத் தூதரக அதிகாரி கஸுவோ மினகாவா தொடங்கி வைக்கிறார்.
இந்த பட விழாவில் ஸ்விங் கேர்ள்ஸ், பர்ஸ்ட் லவ், கோஸ்ட் பப், மை சன்ஸ் உள்ளிட்ட ஐந்து படங்கள் திரையிடப்படும்.
அனைத்துப் படங்களும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை ஆடிட்டோரியத்தில் திரையிடப்படும்.
விழாவில் நடிகை சுஜிதா குத்து விளக்கேற்றி வைக்கிறார்.
Comments


Click it and Unblock the Notifications