தீயவனுக்கு தடையில்லை!

சென்னையை சேர்ந்த சண்முகப்பிரியா சென்னை ஐகோர்ட்டில் தீயவன் படத்துக்கு தடைகோரி சில தினங்களுக்கு முன் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:
சென்னை, சாலிக்கிராமத்தை சேர்ந்த கதிரேசன், தனது மனைவி மூலம் தீயவன் படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்துக்கு என்னிடம் பைனான்ஸ் கேட்டார்.
எனது சகோதரர் ஸ்ரீரஞ்சனை படத்தில் கதாநாயகனாக நடிக்க வைக்க வேண்டும் என்றும், வாங்கிய பணத்திற்கு வட்டியும் வழங்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரூ.30 லட்சத்து 30 ஆயிரத்தை கடனாக வழங்கினேன்.
இப்போது எனது சகோதரர்தான் இதன் கதாநாயகன். ஆனால் படத்தின் பாடல் விழாவில் என்னை அழைக்கவில்லை. இணை தயாரிப்பாளர் என்று என்னை பட டைட்டிலிலும் சேர்க்கவில்லை. வாங்கிய பணத்தை திருப்பியும் தரவில்லை. ஆகவே, இந்த படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இம்மனுவை மனுவை நீதிபதி எம்.ஜெயபால் விசாரித்து, வாங்கிய பணத்தை திருப்பிச் செலுத்தும் வரை இப்படத்தை வெளியிடக் கூடாது என்று இடைக்கால தடை விதித்தார்.
இந்த தடையை நீக்கக் கோரி பட அதிபர் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. குறிப்பிட்ட நேரத்தில் இந்த படத்தை வெளியிடா விட்டால், எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என்று பதில் மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை நீதிபதி கண்ணன் நேற்று விசாரித்தார். பின்னர் படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கினார். மேலும் வழக்கு விசாரணையை தள்ளி வைப்பதாகவும் அறிவித்தார்.


Click it and Unblock the Notifications











