பிரான்ஸை ஈர்க்கும் ப்ரூனி!

By Staff

Carla Bruni with Sarkozy
பாரிஸ்: பிரான்ஸ் மக்களை அதிபர் சர்கோஸியின் காதல் மனைவியும், முன்னாள் மாடல் அழகியுமான கார்லா ப்ரூனி வெகுவாக கவர்ந்து வருவதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்து.

மூன்றில் இரண்டு பங்கு பிரெஞ்சுக்காரர்களுக்கு ப்ரூனியை ரொம்பப் பிடித்துப் போய் விட்டதாம். ஜர்னல் டு டிமான்சே என்கிற இதழ் இந்த கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது.

இதில் கலந்துகொண்டவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் கார்லா ப்ரூனி சிறப்பாக செயல்படுவதாகவும், அவரை தங்களுக்குப் பிடித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதிபரின் மனைவியாக இருந்து கொண்டு இசை உலகிலும் அவர் செயல்படுவதில் தவறில்லை என்று 35 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். ஆனால் ஏதாவது ஒன்றில்தான் அவர் கவனம் செலுத்த வேண்டும் என 40 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸின் பெயரையும், பெருமையையும் உலக நாடுகளில் பிரபலப்படுத்த ப்ரூனி உதவியுள்ளதாக 64 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

40 வயதாகும் கார்லா ப்ரூனியை, சர்கோஸி காதல் மணம் புரிந்தது முதல் ப்ரூனியின் படம் இடம்பெறாத பத்திரிக்கைகளே பிரான்ஸில் இல்ைல. அவரது ஏதாவது ஒரு படத்தைப் போட்டு செய்திகளைப் போடுவதில் பிரான்ஸ் மீடியாக்களிடையே கடும் போட்டியே நிலவுகிறது. இதில் சில இதழ்கள் இதுவரை வெளிவராத ப்ரூனியின் படம் என்ற விளம்பரத்துடன் எக்ஸ்க்ளூசிவ் படங்களையும் போட்டுக் கலக்கி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X