»   »  குணால் காதலி பரபரப்பு வாக்குமூலம்!!

குணால் காதலி பரபரப்பு வாக்குமூலம்!!

Subscribe to Oneindia Tamil
Lovina
நடிகர் குணால் தற்கொலை செய்து கொண்டபோது அவருடன் தங்கியிருந்த அவரது காதலியும், வளரும் இளம் நடிகையுமான லோவினா பாட்டியா போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் தந்துள்ளார்.

காதலர் தினம் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான நடிகர் குணால் மும்பையில் உள்ள தனது அடுக்கு மாடிக் குடியிருப்பில் நேற்று அதிகாலை தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

அவர் தற்கொலை செய்து கொண்டபோது அவரது வீட்டில், இளம் நடிகை லோவினா பாட்டியா மட்டுமே இருந்தார். இதையடுத்து லோவினாவிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

குணால் ஏற்கனவே திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்கொலை செய்து கொண்ட தினத்தன்று குணாலின் மனைவி அனுராதா தனது இரு குழந்தைகளுடன் அகமத்நகரில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றிருந்தார்.

அன்று முழுவதும் மன அழுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்டவராக இருந்தாராம் குணால். லோவினாவுடன், குணால் நெருங்கிப் பழகியதால் அனுராதா மனமுடைந்தார் எனவும், இதனால்தான் தாய் வீட்டுக்கு அவர் போனதாகவும் கூறப்படுகிறது.

பேஷன் டிசைனராக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கியவர் லோவினா பாட்டியா. நடிப்பு மற்றும் திரைப்பட உருவாக்கத்தில் டிப்ளமோ பெற்றுள்ள இவர், ஷாகித் கபூர், அம்ரிதா ராவ் ஆகியோர் நடித்த விவாஹ் படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.

இந் நிலையில், குணாலுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. குணால் தயாரித்து நடிக்கவிருந்த புதிய இந்திப் படத்தில் லோவினா ஹீரோயினாக அறிமுகமாகவிருந்தார்.

இதுதொடர்பாக அவருடன் விவாதிக்கவும், தான் அணியப் போகும் புதிய ஆடைகளை அவரிடம் காட்டவும் குணால் வீட்டுக்கு வந்ததாகவும், அங்கேயே தங்கிவிட்டு, அதிகாலையில்தான் தான் குளியலறைக்குச் சென்றபோது குணால் தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசாரிடம் லோவினா கூறியுள்ளார்.

நான் பாத்ரூமுக்கு சென்றிருந்தேன். பத்து நிமிடம் கழித்து திரும்பியபோது மின்விசிறியில் குணல் தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்தேன் என்று போலீசாரிடம் கூறியுள்ளார் லோவினா.

உடனடியாக தனது தந்தைக்கும், குணலின் தந்தைக்கும் போன் மூலம் தகவல் கொடுத்துவிட்டு அடுக்குமாடிக் குடியிருப்பின் காவலாளிகளுக்கு தகவல் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

ஏற்கனவே திருமணமான குணாலுடன் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளார் லோவினா. இருவரும் திருமணம் செய்து கொள்ள இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் தனக்கும், குணாலுக்கும் இடையே எந்தவித காதலும் இல்லை என்றும், சாதாரண நண்பர்களாகத்தான் பழகி வந்ததாகவும் கூறியுள்ளார் லோவினா.

குணால் தயாரிப்பில் அவரே ஹீரோவாக நடிக்க, லோவினா நாயகியாக நடிக்க புதிய படம் ஒன்றை வருகிற 15ம் தேதி தொடங்கவிருந்தனர். அப்படத்துக்கு யோகி எனவும் பெயர் சூட்டியிருந்தார் குணால் என்பது குறிப்பிடத்தக்கது.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil