twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாகிஸ்தான் சென்று பாட விரும்புகிறேன்: லதா மங்கேஷ்கர்

    By Staff
    |

    Lata Mangeshkar with Madhuri Dixit
    இஸ்லாமாபாத்: எனது பாடலால் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நட்புறவு வலுப்படுமானால், பாகிஸ்தான் சென்று பாடத் தயாராக இருக்கிறேன் என்று இசைக் குயில் லதா மங்கேஷ்கர் கூறியுள்ளார்.

    பாகிஸ்தானின் டான் டிவிக்கு லதா மங்கேஷ்கர் இதுதொடர்பாக அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

    பேட்டியின்போது லதா கூறுகையில், நான் இதுவரை பாகிஸ்தான் சென்றதில்லை. ஜியா உல் ஹக் அதிபராக இருந்தபோது அங்கு செல்ல ஒரு வாய்ப்பு வந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அது ரத்தாகி விட்டது.

    எல்லாம் முடிந்த நிலையில் திடீரென பயணம் ரத்தாகி விட்டது. நிகழ்ச்சியை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்ததால் நான் போகவில்லை என்றார் லதா.

    பேட்டியின்போது பேட்டி கண்டவர் லதாவிடம், காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக பாகிஸ்தான் கவிஞர் ஒருவர் ஒரு கவிதை எழுதியதாகவும், அதில், டீக் கடையில் ஒரு இந்தியரும், ஒரு பாகிஸ்தானைச் சேர்ந்தவரும் காஷ்மீர் தொடர்பாக கடுமையாக வாதிடுவதாகவும், அப்போது லதா மங்கேஷ்கரின் பாடல் ஒலித்ததைக் கேட்டு இருவரும் சண்டையை நிறுத்தி
    சமாதானமாக போவதாகவும் கவிதையில் கூறியிருப்பதாக தெரிவித்தார்.

    அதைக் கேட்ட லதா, நிஜத்திலும் இப்படி நடந்தால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன். எனக்கு பாகிஸ்தான் வர விருப்பம்தான். ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக எனக்கு யாருமே அழைப்பு விடுக்கவில்லையே. யாராவது என்னை அழைத்தால் நிச்சயம் நான் வரத் தயார் என்றார்.

    தொடர்ந்து லதா பேசுகையில், எனக்கும், பாகிஸ்தானின் இசையரசி நூர்ஜஹானுக்கும் இடையே நல்ல நட்பு இருந்தது. இந்தியப் பிரிவினைக்குப் பிறகு நூர்ஜஹான் பாகிஸ்தான் போய் விட்டார். இருந்தாலும் தினசரி நான் போன் செய்து அவருடன் பேசுவேன். தொடர்ந்து இருவரும் நல்ல நட்புடன் இருந்தோம். ஆனால் பாகிஸ்தானுக்கு நூர்ஜஹான் போன பின்னர் நான் அவரை சந்திக்க முடியாமல் போய் விட்டது என்றார். நூர்ஜஹான் தற்போது உயிருடன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    லதா தற்போது எல்லைகள் என்ற பெயரில் ஒரு இசை ஆல்பத்தை உருவாக்கி வருகிறார். இதில் நான்கு இந்திய பாடகர்களும், நான்கு பாகிஸ்தானிய பாடகர்களும் பாடியுள்ளனர். இதுவரை 3 பாடல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் சில பாடல்கள் பதிவு செய்யப்படவுள்ளதாகவும் லதா குறிப்பிட்டார்.

    --

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X