twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கன்னட நடிகர் வினோத்ராஜை கொல்ல முயற்சி - தாயுடன் தப்பினார்

    By Staff
    |

    Vinodraj with Leelavathi
    பெங்களூர்: கன்னட நடிகர் வினோத்ராஜை நேற்று பெங்களூரில் சுட்டு கொல்ல முயற்சி நடந்தது. அதில் அவரும், அவரது தாயாரும் முன்னாள் நடிகையுமான
    லீலாவதியும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். அவரது கார் சேதம் அடைந்தது.

    கன்னட நடிகர் வினோத்ராஜ் (45) இதுவரை 30க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். தற்போது தனது தாயார் லீலாவதி தயாரிப்பில் யாரது' என்ற கன்னட படத்தில் நடித்து வருகிறார்.

    அவரது தாயார் லீலாவதியும் ஒரு கன்னட நடிகை. ராஜ்குமார் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். தமிழிலும் நடித்துள்ளார். அவர்கள்' படத்தில் ரஜினிக்கு அம்மா வேடத்தில் நடித்துள்ளார்.

    நடிகர் வினோத்ராஜ் தற்போது தனியார் கன்னட டிவி ஒன்று ஒளிபரப்பும் குழந்தைகள் நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்து வருகிறார்.

    இதற்கான படப்பிடிப்பில் கலந்து கொள்ள அப்பையா ஸ்டூடியோவுக்கு தனது அலுவலகத்தில் இருந்து நேற்று காலை வினோத் ராஜ் காரில் புறப்பட்டார்.

    அவருடன் தாய் லீலாவதி, அவரது மானேஜர் நாகராஜ் ஆகியோர் சென்றனர். காரை டிரைவர் பசவராஜ் ஓட்டிச் சென்றார்.

    கார் உப்பார்பேட்டை போலீஸ் நிலையம் அருகே உள்ள சாந்தலா சர்க்கிளை அடைந்த போது காரின் வலது புற ஜன்னலில் ஏதோ ஒன்று பயங்கர சத்தத்துடன் மோதியது. யாரோ மர்ம நபர்கள் காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதை காரில் இருந்தவர்கள் உணர்ந்து கொண்டனர்.

    இந்த தாக்குதலில் காரில் இருந்த அனைவரும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். கார் கண்ணாடி மட்டும உடைந்தது. நடிகர் வினோத்ராஜை கொல்வதற்காக இத்தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக தெரிகிறது.

    பெங்களூர் சட்டம்-ஒழுங்கு கூடுதல் கமிஷனர் பூஜார் கூறுகையில்,

    விசாரித்து வருகிறோம். துப்பாக்கியால் சுட்டதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. அதற்கான ஆதாரங்கள் எதுவும் சிக்கவில்லை. ஆனாலும் நிபுணர்களின் ஆய்வுக்கு பிறகே உண்மை தெரியவரும்.

    வினோத்ராஜிடமும், அவரது தாயாரிடமும் நாங்கள் விவரங்களை கேட்டு அறிந்தோம். தங்களுக்கு யாரும் விரோதிகள் இல்லை என்றும், சம்பவத்திற்கான காரணம் குறித்து தெரியவில்லை என்றும் அவர்கள் தெரிவித்து உள்ளனர். இதுபற்றி விசாரணை தீவிர விசாரணை செய்து வருகிறோம். விசாரணைக்கு பிறகே உண்மை நிலவரம் தெரியும் என்றார் பூஜார்.

    உப்பார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X