பேரன் நடிப்பைப் பார்த்து வியந்த முதல்வர் கருணாநிதி!

பசங்க படத்தை இயக்கிய பாண்டிராஜின் இரண்டாவது படம் இது.
அருள் நிதிக்கு ஜோடியாக சுனேனா நடிக்கிறார்.
முழுக்க முழுக்க கிராமத்துக் காதலை அடிப்படையாகக் கொண்ட கதையாம் இது.
புதுக்கோட்டை மாவட்ட கிராமங்களில் படுவேகமாக படப்பிடிப்பு நடந்துவருகிறது. இந்தப் படத்தில் அருள் நிதியின் நடிப்பு அசலான ஒரு கிராமத்து இளைஞனைப் பிரதிபலிக்கும் எனும் பாண்டிராஜ், அருள் நிதியின் நடிப்புத் திறனை முதல்வர் கருணாநிதியிடம் காட்ட ஒரு ட்ரெய்லர் தயார் செய்தாராம்.
இரண்டு நிமிடங்கள் ஓடும் அந்த டிரெய்லரைப் பார்த்துவிட்டு, "நம்ம அருளா இது... ரொம்ப நல்லா இருக்குய்யா" என்று ஆச்சரியப்பட்டாராம் முதல்வர்.
Comments


Click it and Unblock the Notifications