ஒரே நாளில் 7 படங்கள் ரிலீஸ்

By Staff

Nesi
கோலிவுட்டில் இப்போது படு வேகமாக படங்களை ரிலீஸ் செய்ய ஆரம்பித்துள்ளனர். எடுத்தோமா, ரிலீஸ் செய்தோமா என்று கிளம்பியுள்ளனர். ஆனால் வெளியான பெரும்பாலான படங்கள் மீண்டும் பெட்டிக்குள் திரும்பி வரும் சோகமும் அரங்கேறி வருகிறதாம்.

கோலிவுட்டில் வழக்கமாக ஜூலை மாதம் பெரிய அளவில் படங்கள் ரிலீஸ் ஆகாது. ஆனால் எப்போதும் இல்லாத அதிசயமாக கடந்த மாதம் 22 படங்கள் ரிலீஸாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம. நாராயணன் ஏமாற்றம் தெரிவித்திருந்தார். இப்படி மொத்தமாக திரைப்படங்களை வெளியிடுவது திரையுலகுக்கு நல்லதல்ல, தயாரிப்பாளர்களுக்கு இதனால் பாதிப்புதான் ஏற்படும் என அவர் கூறியிருந்தார்.

அதற்கேற்ப வெளியான சில படங்கள் சில நாட்களிலேயே தியேட்டரை விட்டு எடுக்கப்பட்டு விட்டன.

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 7 படங்கள் திரைக்கு வந்துள்ளன.

அழகர் மலை, நேற்று போல இன்று இல்லை, நேசி, ஈசா, வண்ணத்துப் பூச்சி, மாதவி, ஒரே மனசு ஆகிய படங்களே நேற்று ரிலீஸ் ஆனவை. இதில் அழகர் மலையும், ஈசாவும் சற்றுப் பெரிய படங்கள்.

இந்த ஆண்டு, ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை மொத்தம் 82 படங்கள் திரைக்கு வந்துள்ளன. அதாவது ஒரு வாரத்துக்கு இரண்டரை படங்கள் என்ற சராசரியில் படங்கள் ரிலீஸாகியுள்ளன.

இது தமிழத் திரையுலகில் புதிய சாதனை என்கிறார்கள். சாதனை படைப்பதெல்லாம் சரிதான், ஆனால் சோதனையாகி, வேதனையில் போய் முடிந்து விடக் கூடாது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X