மல்லிகா ஆபாச நடனம்-வழக்கு ஒத்திவைப்பு

வினோத் ஜெயின் என்பவர் இதுதொடர்பாக மும்பை பெருநகர நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், மல்லிகா ஷெராவத் மிகவும் ஆபாசமான உடை அணிந்து ஆடியுள்ளார். இதனால் இந்தியக் கலாச்சாரத்தை அவர் இழிவுபடுத்தி விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வினோத் ஜெயின் இருதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்டதால் வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்று அவரது வக்கீல் கோரிக்கை விடுத்தார்.
அதை ஏற்ற நீதிபதி வாங்கன்டே ஜூலை 10ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
முக்கால் மணி நேரம் நடந்த அந்த புத்தாண்டு ஆட்டத்திற்கு ரூ. 75 கட்டணத்தை மல்லிகா ஷெராவத் வசூலித்தார் என்பது நினைவிருக்கலாம்.
Comments


Click it and Unblock the Notifications