'சுற்றமும், நட்பும் சூழ'... பாருங்கள்!

By Staff

Mega TV - Sutramum Natpum Soozha serial
நம்மை ஆக்கிரமித்திருக்கும் ஆயிரம் கவலைகளையும் அரை நொடியில் விரட்டியத்து, ஆதரவாய் தலைகோதும் வார்த்தை சுற்றமும்- நட்பும்.

நமது நாடு பொருளாதாரத்தில் வளர்ந்து வருகிறது என்ற மகிழ்ச்சி ஒரு புறம் இருந்தபோதிலும், அதற்காக நாம் இழந்த உறவுகளின் சுகத்தை சுகமாய் சின்னத்திரையில் உணர்வுப் பூர்வமாய் உணர்த்துகிறது மெகா தொலைக்காட்சி.

உறவினர்களின் உறவு முறை பெயர்களை கூட நமக்குச் சொல்லத் தெரிவதில்லை. யாராவது கேட்டால் கூட அதை விளக்கத் தெரியாமல் துhரத்துச் சொந்தம் என்று ஒரே வார்த்தையில் நழுவி விடுகிறோம். வீட்டின் மூத்த பிள்ளை திருமண ஆல்பத்தினையும், கடைசி பிள்ளை திருமண ஆல்பத்தினையும் ஒப்பிட்டு பார்த்தால் இதை தெரிந்து கொள்ளலாம்.

அப்படி ஒப்பிட் பார்த்த இந்த தொடரின் நாயகன் வசந்த், நமது தாய் நாட்டுக்குத் திரும்பி வந்து ஆளுக்கொரு மூலையில் இருக்கும் சொந்தங்களை தனது திருமணத்தின் மூலம் ஒன்றிணைக்க முயற்சி செய்கிறான். இந்த ஒருங்கிணைப்பை விரும்பாத ஒரு நெருங்கிய சொந்தம் ஒன்று தமது சித்து விளையாட்டை துவக்குகிறது. இந்த சித்து விளையாட்டில் வசந்த் வெற்றி பெறுகிறானா என்பது தான் இந்த சுற்றமும் நட்பும்.

மேலோட்டமாக பார்த்தால் கூடி வாழ்வதில் இவ்வளவு பிரச்சினைகள் இருக்கிறதா எனத் தோன்றும். சுற்றத்தின் சுகத்தை அனுபவிக்க எத்தனை விதமான இடையூறுகளையும் சமாளிக்கலாம் என்பது தான் உண்மை.

இந்த தொடரில் வசந்த், ராஜசேகர், அழகு, பாவ்யா, கீர்த்தி ஷர்மிளா, நந்தின உட்பட பலர் நடித்துள்ளனர். இதனை ஏ.எஸ். ஜெகன் இயக்கியுள்ளார்.

சுற்றமும் - நட்பும் மெகா டிவியில் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

சுற்றமும், நட்பும் புடை சூழ காணத் தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X