நயன், நமீதாவுக்கு சேலை-ஸ்ரீராம் சேனா

By Staff

Muthalik
திரைப்படங்களில் ஆபாசமாக நடித்து இந்திய கலாச்சாரத்தை சீரழிக்கும் நயன்தாரா, நமீதா, திரிஷா உள்ளி்ட்ட நடிகைகளுக்கு சேலை வழங்கும் போராட்டத்தில் ஈடுபட போவதாக ஸ்ரீராம் சேனா தலைவர் முத்தலிக் தெரிவித்துள்ளார்.

சென்னை வந்த அவர் இது குறித்து தனது அமைப்பினருடன் ஆலோசனை நடத்திய பின் கூறுகையில்,

பெண்கள் மது அருந்திவிட்டு அரைகுறை ஆடைகளுடன் ஆட்டம் போடும் கலாசார சீரழிவு நாட்டில் ஏற்பட்டுள்ளது. மது மயக்கத்தில் புத்தி கெட்டு இல்லாமல் அரை நிர்வாணமாக ஆடிய பெண்களை ஹோட்டலுக்குள் புகுந்து நாங்கள் வெளியேற்றியதை விமர்சிக்கின்றனர்.

எங்கள் அமைப்பினர் உள்ளே சென்ற போது, எங்கள் சொந்தக் காசில் குடிக்கிறோம், கூத்தடிக்கிறோம். அதை கேட்க நீங்கள் யார் என்று செருப்பை தூக்கி காட்டினார்கள். அவர்களிடம் அமைதியாக சென்று நியாயத்தை எடுத்து சொல்ல முடியாது.

கடுமையாக நடந்து கொள்வதன் மூலம் தான் இது போன்ற வெளிநாட்டு கலாசாரங்களை அடக்க முடியும். எங்கள் அதிரடி செயல்கள் காரணமாக கர்நாடகாவில் 75 'பப்'கள் மூடப்பட்டன. உண்ணாவிரதம் நடத்தியெல்லாம் இது போன்ற கலாச்சார சீரழிவை தடுக்க முடியாது.

தன் மகள் 'பப்'பில் மது குடித்து அரைகுறை ஆடையுடன் எவனோ ஒருவனோடு ஆடிக்கொண்டிருப்பதை எந்த தகப்பனும் பார்த்து கொண்டு சும்மா இருக்கமாட்டான். வயிறு எரிந்து அறைய மாட்டானா? அதைதான் எங்கள் அமைப்பினர் செய்தார்கள்.

நாங்கள் தாக்குதல் நடத்திய 'பப்'பில் குடிபோதையில் ஆடிக் கொண்டிருந்த பெண்களில் முப்பது பேர் மருத்துவக் கல்லூரி மாணவிகள். அந்த விஷயமே வெளியே வரவில்லை.

என்னை கண்டித்து சில பெண் அமைப்பினர் பிங்க் கலர் ஜட்டிகள் அனுப்பினார்கள். அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது போன்ற கலாச்சார சீரழிவுகளை நான் தொடர்ந்து தட்டிக் கேட்பேன்.

நடிகைகளாலும் கலாசார சீரழிவு ஏற்படுகிறது. நடிகைகள் திரிஷா, நயன்தாரா, நமீதா, ஸ்ரேயா, பிரியாமணி போன்றோர் கவர்ச்சி உடை அணிந்து கலாசார சீரழிவுக்கு வழிவகுக்கின்றனர். அந்த நடிகைகளுக்கு சேலை வழங்கும் போராட்டத்தை நடத்தப் போகிறோம்.

அதன் பிறகும் தொடர்ந்து கவர்ச்சியாக ஆடை கட்டி முகம் சுளிக்கும்படி அவர்கள் நடந்தால் அதற்கு வேறு மாதிரி முடிவு கட்டுவோம் என்றார் முத்தாலிக்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X