ரஜினிக்கு கர்நாடக தடை-கோலிவுட் அவசர ஆலோசனை

கன்னட அமைப்பினரின் போராட்டங்களைக் கண்டித்து சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது திரையுலகம். இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு ஆவேசமாக பேசினார். முதல் முறையாக கர்நாடக அரசியல் தலைவர்களையும், கன்னட அமைப்பினரையும் கடுமையாக சாடினார்.
இதனால் கடுப்பான கன்னட அமைப்பினர், ரஜினிக்கு தடை விதிப்பதாகவும், அவர் கர்நாடகத்திற்குள் நுழையக் கூடாது என்றும் தடை விதித்துள்ளனர்.
ஆனால் இதற்கெல்லாம் தான் பயப்படப் போவதில்லை, படங்களை கர்நாடகத்தில் திரையிடாவிட்டால் எனக்கு எந்த நஷ்டமும் இல்லை. யாரிடமும் நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று ரஜினி கூறி விட்டார்.
இந்த நிலையில் ரஜினிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து நடிகர் சங்கம் இன்று கூடி விவாதிக்கவுள்ளது. நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில், ரஜினி தடை குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும். அதேபோல உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்காத நடிகர், நடிகையர் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.


Click it and Unblock the Notifications











